Friday, November 18, 2022

மகாராணி

 சிறுகதை

By Rangarajan from Madhyamar face book

மகாராணி

எங்க வீட்டு மகாலட்சுமி எதிர் வீட்டிலியே இருந்திருக்கா.. அது தெரியாம எங்கெல்லாமோ பொண்ணு தேடி அலஞ்சோமே.. மீனாட்சி அங்கலாய்த்துக் கொண்டாள் கணவன் சரவணனிடம்.

ப்ரீத்தியின் அப்பாதான் சரவணன்  ஃபோனில் தொடர்பு கொண்டார். நீங்க பதிவு பண்ணி வெச்சிருந்த matrimonialலதான் நானும் என் பொண்ணுக்கு register பண்ணியிருந்தேன். ஜாதகம் பொருந்தியிருக்கு சரவணன் சார். நீங்க ஓக்கேன்னா பாக்கலாம் உங்க பையன் கார்த்திக்குக்கு. 

நல்லா பொருந்திருக்குன்னு நீங்களே சொல்லிட்டீங்க. எதிர் வீட்லியேவும் இருக்கிங்க. ஒண்ணுக்குள்ள ஒண்ணு முடிச்சிடலாம். 

கார்த்திக்கும் அந்த பெண்ணை பலமுறை பார்த்திருக்குறான். ஆனால் பேசியதில்லை. இந்த பேச்சு நடந்துகொண்டிருக்கும் போதே அவனும் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். என்னடா கார்த்தி.. உன்ன கேக்காம சொல்லிட்டேன். 

ஓக்கேப்பா no problem.

மீனாட்சியும் அந்தப் பெண்ணை பார்த்திருக்கிறாள் வாசலில் கோலம் போடும்போதும் ரேஷன் கடையிலும். 6 மாதம் முன்புதான் எதிர் வீட்டுக்கு குடித்தனம் வந்திருந்தனர். பொண்ணோட அம்மா சண்டைக்காரி என்று இவளது ஃப்ரென்ட் ஒருமுறை சொன்னதாக ஞாபகம். 

மீனு அதெல்லாம் போட்டு குழப்பிக்காத. நம்ம பையன் தான் அந்த பொண்ணு கூடதான வாழப் போறான். அவங்க அம்மா எப்படி இருந்தா என்ன. அது இல்லீங்க தாயைப்போல பிள்ளைனு கேள்விப் பட்டதில்லையா? 

இது பொண்ணு..

நன்றாகத்தான் பேசினாள் ப்ரீத்தியின் அம்மா மீனாட்சியிடம். எதிர் வீட்டிலேயே சம்மந்தி அமைந்தது எங்களுக்கு திருப்தி என்றனர் ப்ரீத்தியின் பெற்றோர். 

கல்யாணத்தன்று.. சார் எல்லாம் தெரிஞ்சுதான் ஒத்துக்கிட்டீங்களா இந்த கல்யாணத்துக்கு என்று கேட்டார் பெண்ணின் உறவினர் ஒருவர்..ஏன் அப்படி கேட்டார் என்று அன்று புரியவில்லை சரவணனுக்கு. எல்லாப் பொருத்தமும் நல்லாருக்குன்னு சொன்னார்களே...

முதலிரவு.. 

ப்ரீத்தி.. முதல்லியே மாத்திரைய போட்டுக்கோ..அம்மா ஓதினாள் காதில்.  

இப்போ கொஞ்சநாளா இல்ல..நீதான் பாக்கிறயே.. 

மீனாட்சி அரையும் குறையுமாக கேட்டுக் கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. 

நீண்ட நேரம் பேசிக்கொண்டேதான் இருந்தனர் ப்ரீத்தியும் கார்த்தியும் அன்று இரவு முழுவதும். 

அந்த மூன்று நாட்கள் வந்தது. அம்மா வீட்டுக்கு சென்றாள் ப்ரீத்தி.  எதிரில் தானே.. 

இரண்டு நாட்கள் கழித்து..டேய் கார்த்தி.. உங்க மாமியார் ப்ரீத்திகிட்ட ஏதோ மாத்திரைய போட்டுக்கோன்னு first night அன்னிக்கி சொல்லிட்டிருந்தாங்க. என்ன மாத்திரை போட்டுக்கிறா ப்ரீத்தி. 

தெரியலையேம்மா..

அவ suitcase ல பாரு. 

லேபிள் கிழிந்த ஒரு பாட்டிலில் சில மாத்திரைகள் பிரித்து கொட்டியிருந்தது. இவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. கார்த்திக் medical representative தான். இருந்தாலும் லேபிள் இல்லாததனால் இவனால் எதற்கு என்று தீர்மானமாக சொல்ல முடியவில்லை. ஒரு மாத்திரையை மட்டும் பாக்கெட்டில் எடுத்து போட்டுக்கொண்டான். Lab test க்கு அனுப்பி கேட்கலாம் என்று. 

கார்த்தி..இப்பதான் ஞாபகம் வருது. செல்வரங்கம் நர்ஸிங் ஹோம்ல  ப்ரீத்திய பார்த்தேன் சில மாதங்களுக்கு முன்னால். 

அந்த ஹாஸ்பிடல் chief எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்மா.. ப்ரீத்திகிட்டயே கேட்டுடலாமேம்மா.. 

கண்டிப்பா அவ மழுப்புவா. நீ முதல்ல போய் கேட்டுட்டு வா.. 

அப்பாவையும் கூட்டிட்டு போ..  

ஹாய் டாக்டர்.. வாங்க கார்த்திக். உங்க daddy யா. உட்காருங்க சார். Have seen your  profile picture in WhatsApp.  Very cute and nice. . உங்க wife என் patient தான். உங்களு்க்கு பெரிய மனசு. 

சந்தேகமாகப் பார்த்தான் அந்த லேடி டாக்டரை. புரியல doctor. Actual ஆ நான் எதுக்கு வந்தேன்னா இந்த மாத்திரைய பாருங்க.. 

மாத்திரைய விடுங்க. உங்களுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா?

ப்ரீத்தி ரொம்ப உணர்ச்சிவசப்பட்டா அவளுக்கு fits வரும் கார்த்திக். 

சரவணனுக்கு அப்போதுதான் strike ஆனது. தெரிஞ்சிதான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்களா என்று ஒருவர் கேட்டது. 

டாக்டர்.. நீங்க சொல்றத பார்த்தா🫢. Yes.. நீங்க நெனைக்கிறது கரெக்ட். .உணர்சிவசப்பட்டாதான் உடலுறவே கொள்ளமுடியும். She is not fit for that at present.  I am very sorry. 

கிளம்பினார்கள் இருவரும். .என்ன கார்த்திக் ஒண்ணுமே சொல்லாம கிளம்பிட்டிங்க.

நீங்க என்ன பார்த்தவுடனே என்ன சொன்னீங்க டாக்டர்?

உங்களுக்கு பெரிய மனசுன்னுன்னு சொன்னேன். 

என் ப்ரீத்திய நான் உணர்ச்சிவசப் படாம மகாராணி மாதிரி பாத்துக்கப் போறேன் டாக்டர்.. 

அப்பா ..நான் எதுவும் சொல்லமாட்டேன் மீனாட்சிகிட்ட..

கால்சியம் டேப்லெட்தான்னு சொல்லப் போறேன் அம்மாகிட்ட.  ஓகேவா...

No comments:

Post a Comment