*என் சமையல்.*
உமா
ஜவ்வரிசி கிச்டி (வட இந்திய உணவு வகை)
தேவையான பொருட்கள்:-
தாளிக்க:-
1. ஜவ்வரிசி:-
ஜவ்வரிசியை நன்றாக நீர் விட்டு அலசவும்.
ஜவ்வரிசி மூழ்குமளவு நீர் விட்டு 8 மணி நேரம் ஊறவிடவும்.
எஞ்சிய நீரை வடிகட்டி விடவும். ஜவ்வரிசி தயார்.
காற்றுபுகாத பார்த்திரத்தில் அடைத்தால், இதை 2 வாரம் வரை குளிர்பதனப் பெட்டியில் சேமிக்கலாம்.
2. உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறிய சதுரங்களாக நறுக்கவும்.
3. வேர்க்கடலையை நன்றாக வறுத்து கரகரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
செய்முறை:-
கனமான பாத்திரத்ததை அடுப்பிலேற்றி, சிறிது எண்ணை விட்டு, காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
உருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
ஜவ்வரிசி, வேர்க்கடலை சேர்த்து நன்றாக கிளறி மூடி விடவும்.
மிதமான வெப்பத்தில் அவ்வப்பொழுது கிளறியபடி 15 நிமிடங்கள் வேக விடவும்.
ஜவ்வரிசி மிகவும் மென்மையாக, கண்ணாடி போன்று தெரிந்தால் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
விரும்பினால் சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பரிமாரவும்.
No comments:
Post a Comment