Friday, November 18, 2022

வீட்டிலேயே ப்ரெட்

 ப்ரெட்.

By LathaSrini from Madhyamar face book 

இப்பொழுது வீட்டில் 2 பேர் மட்டுமே இருக்கிறோம். ப்ரெட் வாங்கினால்

முழுதாக உபயோகிக்காமல் வீணாகிறது. அதனால் இப்பொழுது

தேவை என்னும் போது வீட்டிலேயே செய்யலாம். படிக்கும் போது கடினமானது போல் இருந்தாலும் சப்பாத்தியை விட சுலபமானது.

1.ஆல் பர்பஸ் மாவு/மைதா 3.5 கப்
2.பொடி செய்த கல் உப்பு 1 டீ ஸ்பூன்
3. ஆக்டிவ் ஈஸ்ட் 1.5 டீ ஸ்பூன்
4.சர்க்கரை 1 டீ ஸ்பூன்
5.தண்ணீர் மிதமான சூட்டில் 2 கப்
6.ஆலிவ் எணணை.3 டீ ஸ்பூன்
7.பால் 2 டீ ஸ்பூன்

ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் அரை கப் வெதுவெதுப்பான தண்ணீர் விட்ட,சர்க்கரை சேர்த்து கலந்து,1.5 ஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து10 நிமிடம் வைக்கவும். இப்பொழுது இந்த கலவை நன்றாக நுரைத்து இருக்க வேண்டும். ஈஸ்ட் புதியதாக

இருந்தால் இப்படி இருக்கும். இல்லையெனில்.திரும்பவும் செய்து பார்க்கவும்.

இத்துடன் பொடித்த கல் உப்பை சிறிது நீரில் கரைத்து வைக்கவும்.

மாவை இருமுறை சலித்து ஈஸ்ட் கலவையில் சேர்க்கவும்.உப்பு தண்ணீர் சேர்த்து தேவையான நீர் விட்டு நன்றாக பிசையவும்.

மேடையை நன்றாகத் துடைத்து சிறிது மாவுத்தூவி பிசைந்த மாவுருண்டை வைத்து 5நிமிடம் அடித்து பிசையவும்.

மாவுப் பாத்திரத்தில் எண்ணைத்தடவி மாவுருண்டை மேல் எண்ணைத் தடவி மூடி வைக்கவும்.

ஒரு மணி நேரத்தில் மாவு இரு மடங்காக பூத்து இருக்கும்.

கையில் சிறிது எண்ணைத் தடவி மாவை தட்டி கீழ்ப்பக்கமாக 5 தடவை மடித்து அழுத்தி பிசைந்து,திரும்பவும் மூடி வைக்கவும்.

அரை மணியில் திரும்பவும் எடுத்து சிறிய உருளையாக உருட்டி.மேல் சிறிது பால் தடவி அலுமினியத்தட்டிலோ ப்ரெட் மோல்டிலோ வைக்கவும்.கத்தியால் குறுக்கில் கீறவும்.

ஒரு அடி கனமான குக்கிங் pan ல்சுத்தமான மணலோ,உப்போ போட்டு மேஜையில் சூடான பாத்திரம் வைக்க உதவும் ஸ்டாண்ட் வைத்து மாவு வைத்துள்ள தட்டை வைத்து 30 நிமிடம் ரப்பர் கேஸ்கட் இல்லாமல் மூடவும்.15நிமித்திற்கு பிறகு திறந்து

மேலாக பால் தடவி திரும்ப மூடி நல்லமணம் வந்தவுடன் திறந்து எடுத்துகம்பி வலை மேல் வைத்து சிறிதுவெண்ணெய் தடவிஆற விடவும்.

No comments:

Post a Comment