Friday, November 11, 2022

மரு (Warts) நீக்க மருத்துவம்

 #ஆரோக்கியமே ஆனந்தம் 

மரு (Warts) நீக்க மருத்துவம் 

* விளக்கெண்ணெய்யை பாலுண்ணி, மரு, பரு வந்த இடங்களில் சில வாரங்கள் தடவி வர நல்ல குணம் தெரியும். 

* சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய் விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி, மரு மீது சில தினங்கள் போட குணமாகும்.

* வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தால் மருக்கள்(warts) மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் வெந்நீரில் கழுவிக்கொள்ளலாம்.

* வெங்காயத்துடன் கல் உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைத்தும் மரு இருக்கும் இடத்தில் பற்று போடலாம். பிறகு வெந்நீரில் மரு இருக்கும் இடத்தை கழுவி தேய்த்து வந்தாலும் மரு உதிர தொடங்கும்.

* அம்மான் பச்சரிசி செடி வைரஸ்களால் உடலில் தோன்றும் மரு (Warts), பாலுண்ணிகளின் (Molluscum contagiosum) க்கு சிறந்த மருந்தாகும், இந்த செடியை உடைக்கும்போது வெளிவரும் பாலைத் தொடர்ந்து தடவிவந்தால், விரைவில் அவை மறையும். தினமும் சிறிது பாலை மருவின் மீது வைத்து வர சிறிது சிறிதாக மருக்கள் உதிர்வதைப் பார்க்க முடியும். 

* சங்கை பால் விட்டு இழைக்கவும். அத்துடன் ஒரு ஜாதிக்காயையும் வைத்து இழைத்து, 5 துளிகள் லேவண்டர் ஆயில் கலந்து, மரு நீக்கிய இடத்தின் மேல் தடவி வந்தால், மறுபடி அது வராது. அரிப்பும் இருக்காது. 

* பூண்டை நீர்விடாமல் அரைத்து மருக்கள் மீது தடவி அரைமணி நேரம் காயவிட்டு எடுக்க வேண்டும். தொடர்ந்து செய்தால் மரு உதிரும், ஆரம்பத்திலேயே இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை ஜெல்லையும் எலுமிச்சை சாறையும் சம அளவு கலந்து மரு மீது படும்படு நன்றாக மசாஜ் செய்து வர வேண்டும் பிறகு சற்று சூடாக வெந்நீர் படும்படி நன்றாக ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து இப்படி செய்து வந்தாலும் மரு வலுவிழந்து விழும்.

* இஞ்சியை தோல் சீவி பேஸ்ட் போல் அரைத்து மரு உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். இஞ்சியின் காரத்தன்மை சருமத்தில் எரிச்சலை உண்டு செய்தாலும் கூட தொடர்ந்து செய்து வரும் போது மரு உதிரும்.

கண்களுக்கு அருகில் இருந்தால் கவனமாக மருத்துவமுறையை பின்பற்ற வேண்டும்.

இந்த மருத்துவ முறைகளை பொறுத்தவரை மாற்றம் உடனே தெரியாது படிப்படியாக குணமாகும். மனம் தளராமல் மருத்துவ முறையை பின்பற்ற வேண்டும். பொறுமை மிக அவசியம்.


No comments:

Post a Comment