72. ரூம் 21 (பார்ட் 2 of 2) (சிசீ7) #ganeshamarkalam
நாகர்கோவில் தாண்டித்தான் நாங்க போர இடம். கன்யாகுமரி கவெர்ன்மென்ட் மெடிக்கல் காலேஜும் அதை ஒட்டின ஆஸ்பத்ரீயும். “ஆம்புலன்ஸ் வந்திண்டிருக்கு, உடனே செஞ்சாகணும், DSP ராகவன் வரார்.” இன்ஸ் தகவல் அனுப்பியிருப்பான்.
ஆம்புலன்ஸில் பாடி, கூடவே 2 கான்ஸ்டெபிள். நானும் சங்கவியும் என் ஜீப்பில். ஃபாரென்ஸிக் டீம் ஜோலி முடிச்சுட்டு ரூம சீல் வச்சுட்டு கிளம்பிடுவா. ரிசார்ட் மேனேஜர் வெளீல போயிருக்கான். வளர்மதி ஆவி மட்டும் ரிசார்ட்டுலேயே சுத்துமோ? ஆமாம்னு பட்டது. அவள் சாவு தற்கொலை இல்லைன்னா நீதி கிடைக்கரவரைக்கும் சுத்தும். எப்பேற்பட்ட கெட்ட மனுஷாளா இருந்தாலும் இயற்கை அல்லாத மரணம் கொடுமை. நிறைய பாத்தாச்சு. டெயரக்ட்டா இன்வால்வ் ஆனேன்னா தப்பு நடந்த சேம் டே துப்புத் துலக்கி குத்தவாளிய பிடிச்சுடுவேன். ஓடிப்போய் ஒளிஞ்சிண்டா பிடிச்சு உள்ளே போட நாளாலாம். என்ன நடந்தது, யார் செஞ்சிருப்பான்னு நிச்சயமா 24 அவர்ஸில் முடியணும். இல்லைன்னா IPS பாஸானதுக்கு அர்த்தமேயில்லை.
முக்கியமா சஞ்சலத்தோட அலைஞ்சிண்டிருக்கும் ஆத்மாவுக்கு குளோஷர் கொடுத்து அதன் வழீல அனுப்பி வைக்கணும். என் வேலையின் முக்கிய நோக்கமா அதைத்தான் நினைக்கரேன்.
ட்ரேஃபிக் ஜாஸ்த்தி. “சங்கவி, உனக்கு ஆத்மாமேல் நம்பிக்கை இருக்கா?” இருக்கு சார், எதுக்கு கேக்கரீங்க?” “வளர்மதியோட ஆத்மா இன்னும் அங்கேயே சுத்திண்டிருக்குமே, நீங்க ரூமில் ஆராய்ச்சி செஞ்சப்போ உங்களைப் பாத்திருக்குமே!” “ஏன்ன சார் பயம் காட்டரிங்களா?” “அப்படியில்லை. என் எக்ஸ்பீரியன்ஸில் ஒண்ணு எப்பவும் செய்வேன். எல்லாரையும் போச் சொல்லீட்டு க்ரைம் சீனை சுத்தி வருவேன். சில அபூர்வமான விஷயங்கள் என் மூளைக்கு புலப்படும். ஆனா அப்படி புலப்படுவதுக்கு என் பக்கத்துலேயே அந்த பாதிக்கப் பட்ட ஆத்மா என்னை இங்கே பார், அங்கே விட்டூட்டியேன்னு காமிச்சுக் கொடுக்கரதா ஃபீலிங்க் வரும். நிறைய பேர் நின்னுண்டு சந்தடி செஞ்சா அப்படி செய்யாது. நம்பளைப் போலவே நடந்த உண்மையும் அதன் மூல காரணமும் துப்புத் துலக்க வந்தவாளுக்கு சீக்கிரம் தெரியணும்னு ஆசைப்படுவது அந்த ஆத்மா மட்டுமே.”
“அப்படீன்னா ஒண்ணு செய்வம் சார். என்னோட டீம் நாங்க சயின்டிஃபிக்கா என் ட்ரெயினிம்க் யூஸ் செஞ்சு கண்டுபிடிச்சதை ஒவ்வொண்ணா சொல்ரேன். அதை நீங்களும் பாத்திருக்கலாம். உங்களுக்கு அந்த ஆத்மா காட்டித் தந்திருக்கலாம். நான் பாக்காதது நீங்க பாத்திருந்தா வளர்மதியோட ஆத்மா பாக்க வச்சதுன்னு எடுத்துக்கலாம். சரியா?’ “சரி.”
சொல்லிண்டேவரா. தாப்பாப் போடாம வச்சிருந்த ரூம் என்ட்ரன்ஸ் கதவு. கைரேகையே கிடைக்காதது, சீமன் ஸ்டெயின்ஸ், நெஞ்சில் வலது கை, காபி கப். இப்படி அவள் சொல்லச் சொல்ல எல்லாம் என் மனசுலேயும் ஓடின விஷயங்கள். பெல் பாய், ரூம் செர்வீஸ் பாய் கொராபொரேட் செஞ்சது. “இதைத் தவிற வேற என்ன நீங்க பாத்தீங்க?” “இவளொட பெட்டியக் காணம், பீரோவில் மாத்துத் துணி இல்லாதது, செருப்புக் கூட காணலை”. “ஆமாம்! அதெல்லாம் நானும் பாத்தேன். ஃபாரென்ஸிக்கில் காலி பீரோ நோ ஃபுட்வியர்னு காமிச்சுட்டு போயிடுவம், போடோ எடுத்ததை அட்டேச் செஞ்சிட்டு. இதில் சந்தேகப் படுவது போலீஸ்காரா வேலை. ஒருவேளை மத்த இன்வெஸ்டிகேடிங்க் ஆபீஸர் மாதிரி நீங்களும் எங்க டீமோட ஜாயின்ட் டிஸ்கஷன் வச்சீங்கள்னா எங்க மனசுக்கு பட்டதை சொல்லுவம்.” “இப்போ நாம பெசுவது அப்படிப்பட்ட டிஸ்கஷண்னு வச்சுக்கோ சங்கவி.”
“சார் இந்தக் காலத்தில் இப்படி வசதியான பெண் செல்போனே வச்சுக்கலைன்னா? அது சம்பவ இடத்தில் இல்லாதது நெறுடித்து”. “ஆமாம் எனக்கும்! ஆனா வசதியான பெண் அப்படீன்னு எப்படி சொல்ராய்? கழுத்தில் ஒரு சின்ன மெல்லிசா செயின் மட்டும், காதில் கம்மல், இதுதானே இருந்தது?” “பாத்தீங்களா இதுக்குத்தான் ஒரு பெண்ணோட இன்ட்யூஷன் தேவைம்பம். அவள் அணிந்திருந்த நைட்டீ ரெம்ப காஸ்ட்லீ. அது மட்டுமில்லை விலக்கிப் பாத்தா உள்ளாடைகள் விக்டோரியா சீக்ரெட். அதுவும் காஸ்ட்லீ. இந்தூரில் அப்படி போட்டுண்டு அபூர்வம். க்ளாஸி கேரக்டர்.” “நான் நைட்டிய தூக்கிப் பாக்கலைன்னு ஒத்துக்கரேன். இல்லை அவள் ஆத்மா என்னை தூக்கிப் பாக்க சொல்லலைன்னு வச்சுக்கலாமா?” சங்கவி சிரிச்சப்போ அழகாவே தெரிஞ்சா.
“இன்டெர்கோர்ஸ் ஆகியிருக்குன்னு எப்படி சொல்ராய்?” “எங்களுக்கு தெரியும் சார். போஸ்ட் மார்ட்டத்தில் கன்ஃபெர்ன் ஆவும், பாருங்க”. “கற்றது கையளவு, கல்லாதது உலகளவு”. “அப்ப நீங்க ஓண்ணும் நான் பாக்காததை பாத்துடலை, நானும் என் டீமும்தான் அதிகமா பாத்தம்”. “இல்லை அந்த ஆத்மா எனக்கு மட்டும் காட்டித் தந்தது ஒண்ணு இருக்கு. நீங்க அத கவனிச்சிருக்க மாட்டீங்க.” “அப்படியா? என்ன?” பால்கனிக்கு போக ஒரு அகண்ட கதவு, கிளாஸ் ஸ்லைடிங்க் டோர் இருந்தது தெரியுமா?” “ஆமாம். அது இல்லைன்னா அங்கே போய் பிரம்பு ஊஞ்சலில் எப்படி உக்காந்துண்டு சமுத்ரத்தை ரசிக்க முடியும்?” “வாஸ்தவம்தான். ஆனா அதுக்கு உள் பக்கம் தாப்பா. உள்ளேந்து தொறந்து விட்டாத்தான் வரமுடியும். அதுமட்டுமில்லை. பால்கனீலேந்து தோட்டம் 4 அடிதான். லான் மெயின்டெயின் செய்யரா. அதுலேந்து 20அடில காம்பவுண்ட் சுவர், சின்னதா, வ்யூவ மறைக்கப் பிடாதுன்னு கருங்கல்லில், 3அடிகூட இல்லை”.
“நாங்க கதவை, தாப்பாளை, பால்கனிய நன்னா பாத்தம், ஆனா நீங்க சொல்ராப்போல் நோடீஸ் செய்யலை. நீங்க என்ன முடிவுக்கு வந்தீங்க?”. “சொல்ரேன். போஸ்ட் மார்ட்டம் முடியட்டும்.”
பேசிண்டே இருந்ததில் நாகர்கோவில் வந்ததோ, சக்ரவர்த்தி சினிமா கொட்டாய் தாண்டி KGMC ரோடுக்குள் வந்ததையோ கவனிக்கலை. இன்னைக்கு சவக் கிடங்குக்கு போணம்னு எழுதியிருக்கு போலேருக்கு. பாப்பம். “லெட் அஸ் ஸீ வாட் தி ரெஸ்ட் ஆஃப் தி டே ஹேஸ் இன் ஸ்டோர் ஃபார் அஸ்”. சொல்லிண்டே இறங்கரேன். கூடவே சங்கவி. கதிரேசன் “டீ குடிச்சுட்டு வரேன் சார்.” “வந்து வண்டிகிட்டே இரு. மிக வேகமா நாம திரும்ப கன்யாகுமரி போ வேண்டியிருக்கும்”.
ஜெய்பூர்லேயும் அதுக்கு மின்னாடி அஸ்ஸாம்ல இருந்தப்போ போஸ்ட் பார்ட்டம் பக்கத்துலே நின்னிண்டு என்னத்தை செய்யரானுவன்னு பாத்த அனுபவம். அப்படி இனிமேல் செய்யேண்டாம்னும் கொடுக்கர ரிப்போர்ட்டை நம்பணும்னும் தெரிஞ்சிண்டேன். பாத்தா அடுத்த ஒரு மாசத்துக்கு சாப்பாடு இறங்காது. அதுனால் டாக்டர்கிட்டே “நீங்க செய்யரப்போ டிக்டேட் செய்யும் ஆப்செர்வேஷண் ஆடியோ காபிய வாட்ஸப்பில் கொடுத்துடணும், ரிப்போர்ட் அப்பரமா அனுப்பிச்சாப் போதும்”. “அதெல்லாம் தரதில்லையே!” இழுத்தான். “இன்னைக்கு மட்டும் தரீங்க. என் ரெபுடேஷன் தெரியும்”.
2 மணிநேரம் ஆனதும் ஒரு பென்ட்ரைவ் தந்தான். “பெரீய ஃபைல் சார், கனெக்ட் செஞ்சு கேட்டுக்கோங்க. சொன்னது எல்லாம் ரிப்போர்ட்டில் வராது. எசென்ஷியல் ஃபேக்ட்ஸ் மட்டும். இனிமேல் இதெல்லாம் கேக்கப் பிடாது”. முணுமுணுத்துண்டே போய்ட்டான்.
ஜீப்பில் உக்காந்துண்டு சங்கவி கம்யூட்டரில் போட்டுக் கேக்க கேக்க இவள் கண்கள் அகலமா விரிஞ்சு கொடுப்பதை கண்டேன். எனக்கு ஒண்ணுமே ஆச்சர்யமாப் படலை. எல்லாம் எதிர்பாத்ததே. டாக்டர் சொன்னது நான் நினைச்சதை ஊர்ஜிதப் படுத்தித்து. எல்லாத்தையும் கேட்டு முடிச்சதும் “என்ன செய்யப் போரீங்க? நான் எங்க ஆபீஸுக்கு போட்டமா?” “உங்க இஷ்டம் சங்கவி. ஆனா உங்க ரிப்போர்ட்டை வேற யாரையாவது ப்ரிபேர் செய்யச் சொல்லீட்டு என்கூட கன்யாகுமரி வாங்க. யு கேன் விட்னஸ் எ ட்ரமேடிக் அர்ரெஸ்ட்”. “கேஸ் சால்வ்ட் ஆ?” “பின்னே. ஐ ஹேவ் ஸோ ஃபார் நெவெர் மிஸ்ட் தி 24அவர் டெட்லைன். ஹொய் ஷுட் ஐ திஸ் டைம் தேட் டூ ஃபார் அ பெடி மர்டர்?” கதிரேசன் பக்கம் திரும்பி “வாங்க போலாம்”. “எங்கே சார்?” “காலேல போனமே அங்கேதான்”. “திரும்பவுமா சார்”. “ஆமாம், கடைசீ வாட்டி. எவ்வளவு வேகமா முடியுமோ போங்க. உங்க சாமர்த்தியம்”. ஏறிண்டம். ரோட்லேந்து இடது கால தூக்கி ஜீப்புக்குள் வைக்கரத்துக்கு மின்னாடி வண்டிய எடுத்துட்டான்னா பாருங்கோ.
வழீல சில அத்தியாவசிய போன் கால்ஸ். மொதல்ல லோக்கல் இன்ஸுக்கு. “ரிசார்ட் மேனேஜரை அங்கே இருக்கச் சொல்லு. சில கேள்விகள் இருக்கு. உங்கூர்லேயே பெரீய 5 நக்ஷத்திர ஹோட்டல் இருக்கே என்னது அது?” “நீங்க வந்த ரிசார்ட்லேந்து தள்ளீ அன்னை ரிசார்ட்டுன்னு சார். ரூம் ஏற்பாடு செய்யணுமா? காஸ்ட்லீ சார். நமக்கு ஃப்ரீயா தருவானுவ”. “அதெல்லாம் வேண்டாம், அவிங்க கெஸ்ட் லிஸ்ட் வாங்கி வை. கொயட்டா. ஆர்பாட்டமில்லாம. ஒரு போடோ அனுப்பரேன். அந்த ஆள் அங்கேதான் தங்கியிருப்பான். 4 கான்ஸ்டெபிளை மஃப்டீல அந்த ஹோட்டலுக்கு வெளீல காவந்து ட்யூடீல உடனே போடு. போடோவில் இருப்பவன் மூவ்மென்ட் வாட்ச் செய்யணும். நம்ப ஆளுங்க கிட்டெ பைக் இருக்கணும். டேங்க் ஃபில் செஞ்சு வச்சுக்கச் சொல்லு”. “எதுக்கு சார்?” “செய். வந்து சொல்ரேன்”.
அப்பரம் கன்ட்ரோல் ரூமுக்கு. கோவளம் ரோட்லேயும் நாகர்கோவில் ரோட்லேயும் நாகாபந்தி போட. “இன்ஸ்ட்ரக்ஷன் வரும் ரெடியா இருங்க”. நாகாபந்தீன்னா தெரியலை. ரோட் ப்ளாக்னதும் புரிஞ்சிண்டா. இதை ஆர்வமா சங்கவி.
மின்னாடி கார்த்தாலே 7 மணிக்கு 35 நிமிஷத்தில் வந்த கதிரேசன் இப்ப மதியம் 1 மணிக்கு 23 நிமிஷத்தில். வண்டிய நிறுத்தினதும் “சபாஷ்”னு முதுகில் தட்டித் தந்ததுக்கு அத்தனை பூரிப்பு. போலீஸில் அதுவும் ட்ரைவருக்கு சுலபமா பாராட்டு கிட்டிடாது. இன்னும் ஒருமாசத்துக்கு முதுகில் தண்ணி படாம பாத்துப்பன். “வா சங்கவி, டைம் ஃபார் ஏக்ஷன்.”
மானேஜர் மொதலில். இன்ஸ் கூடவே. “இந்தாளை அரெஸ்ட் பண்ணி ஸ்டேஷனில் வச்சு விசாரிங்க. நடந்ததை கரெக்ட்டா அவனே சொல்லிட்டான்னா அடிக்க வேண்டாம். சொல்லலைன்னா நானே வந்து விளாசுவேன்னு சொல்லு”. சொல்லவே வேண்டாம். மானேஜர் காதில் நான் சொன்னதே விழுந்துடுத்து. “சார் என்னை ஏன் அர்ரெஸ்ட் பண்ரீங்க?” “அபெட்மென்ட் டு மர்டெர் அண்ட் அட்டெம்ப்ட் டு ஹைட் தெ க்ரைம்”.
“சார் யார் கொன்னாங்க?” “பிடிச்சு ரெண்டு பேரையும் ஒரே செல்லில் வைப்பம் அப்ப பாத்துக்க. தெரிஞ்சவர்தான்”. ஜீப்பை அந்த 5 ஸ்டார் ஹோட்டலுக்கு விடச் சொல்ரேன். இன்ஸும் சங்கவியும் கூட. அங்கே பீட் கான்ஸ்டெபில் 3பேர் இருக்க 4ஆவதை காணம். “சார் இப்பத்தான் நீங்க அனுப்பிச்ச போடோல இருந்த ஆள் கிளம்பி கோவளம் ரோட்டில் ஆடி காரில். நம்ப சந்தானம் பைக்கில் பின்னாடி”. “சந்தானம் கிட்டே போன் இருக்கா? கூப்பிடுங்க. நான் பெசரேன்”.
“எங்கே போயிட்டிருக்கீங்க?” “எங்கேயும் போலை சார். அந்த கார் போகுது. உள்ளே போடோவில் இருந்த ஆள். ஃபாலோ செய்யச் சொன்னாங்க. செஞ்சிட்டிருக்கேன்”. “அதான் எக்ஸாக்ட்டா இப்ப எங்கே இருக்கே?” “மணக்குடி ஏரிப் பாலம் தாண்டப் போரம்”. “சரி கூடவே போ. ராஜமங்கலம் கிட்டே தடுப்பு வச்சிருக்கம். அதை தாண்ட விடக் கூடாது. வண்டீல இருப்பது பவர்ஃபுல் ஆள். திகுடுதத்தம் செய்வான். மடக்கி நிறுத்தி வை. பின்னாடியே வந்திட்டிருக்கம்”. கேட்டிட்டிருந்த கதிரேசன் வண்டிய ஸ்டார்ட் செஞ்சாச்சு.
2:30க்கு மாசிலாமணி, MPயும் ரிசாட் மேனேஜரும் கஸ்ட்டடீல. முன்னவன் ஆ ஊன்னு அலட்டினான். மர்டெர் சார்ஜுன்னதும் சித்தே அடக்கி வாசிச்சான். நாளைக்கு கோர்ட்டில் ப்ரொட்யூஸ் செய்வம். ரிமாண்ட் கிடெச்சுடும். அடிக்காமலே உண்மை வந்துடும். எவிடென்ஸ் அப்படி. திரும்பி நாகர்கோவில் போரப்போ மணி 5. சங்கவி கேக்கரா. “எப்படி சார்?” சொல்லணுமா வேண்டாமா!
ரிசார்ட் மாசிலாமணியோடது. மானேஜர் வெறும் எடுபிடி. சொன்னதை செய்வன். வளர்மதி அடிக்கடி வந்துட்டுப் போகும் பாவப்பட்ட ஜென்மம். மாசிலாமணிக்காக. சொந்த ரிசார்ட்டே இருக்கப்போ ரகசியமா வந்து போகக் கொள்ள ஈஸியாப் போச்சு. எப்பவும் ரூம் 21தான். மனுஷன் கொயட்டா இருட்டினப்பரம் பால்கனி வழியா வந்துட்டு போவன். தலைகாணி வச்சு அமுக்கி கொன்னிருக்கான். எல்லாத் தடயத்தையும் அழிச்சுட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்துட்டான். எல்லா இடத்துலேயும் செல்வாக்கு. போஸ்ட் மார்டம் ரிப்பொர்ட் வரத்துக்குள் தெரிஞ்சிண்டு மாத்திடுவன். அதான் ஆடியோ கேட்டேன். இவள் கர்பம். அதைச் சொல்லி ப்ளேக்மெயில் செஞ்சாளோ, கல்யாணத்துக்கு வற்புருத்தினளோ! இவள் அடிக்கடி வந்து தங்குவதை ரூம் செர்வீஸ் பாய் சொல்லிட்டான். பீச் ரோட்டில் வச்சிருந்த CCTV மாசிலாமணி வந்துட்டு போவதை காமிச்சுடுத்து. இன்ஸ்கிட்டே சொல்லலை. இவன் யார் ஆளோ? மேனேஜரோட செல்போன்லேந்து மாசிலாமணிக்கு நிறைய கால் போயிருக்கு. அதையும் இன்ஸ்கிட்டே சொல்லலை.
ஆத்துக்கு வந்ததும் “ஏன் லேட்டு?” “கன்யாகுமரி போயிருந்தேன்”. “எங்களை எப்ப அழைச்சிண்டு போப்போராய் அப்பா?” “அடுத்த வாரக் கடைசீலேயே போலாம். சூர்யோதயமும் அஸ்த்தமனமும் அங்கே பாக்க கொடுத்து வச்சிருக்கணும்”.
No comments:
Post a Comment