Tuesday, March 23, 2021

சிறுகுறிஞ்சானின் அற்புத மருத்துவ பயன்கள்

 சிறுகுறிஞ்சானின் அற்புத மருத்துவ பயன்கள்

1.நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்கள் கட்டுப்பட சிறுகுறிஞ்சான் இலைகளுடன் சம அளவு நாவற்கொட்டைகளை தனித்தனியாக நிழலில் உலர்த்தி  இடித்து தூளாக்கி அதனை சலித்து காற்று புகா டப்பாக்களில் சேமித்து வைத்து பயன்படுத்தலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி தூளை வாயிலிட்டு வெந்நீர் குடித்துவர விரைவில் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

2.சுவாச காசம் அதாவது மூச்சு திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறுகுறிஞ்சானின் வேர் சிறந்த மருந்தாகும். இத்துடன் ஒரு சிட்டிகை, சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் வேர் இவற்றை தூளாக்கி ஒரு தேக்கரண்டி பொடியுடன் வெந்நீர் சேர்த்து குடித்து வர விரைவில் குணமாகும்.

3.உடலில் தோன்றும் வாயு பிரச்சனை, அஜீரணம் போன்ற காரணங்களினால் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை போன்றவற்றாலும் குடல் பாதிக்கப்படும். இதற்கு குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் விரைவில் விரைவில் குணமாவதுடன் வயிற்றில் இருக்கும் கிருமிகள் மடியும்.

4.பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி, அதன் இலைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் விரைவில் விஷம் முறியும்.

5.ஒவ்வாமையால் (Allergy) பாதிக்கப்பட்டவர்கள் சிறுகுறிஞ்சான் வேரைக் தூள் செய்து அடிக்கடி சாப்பிட்டு வர வாந்தி ஏற்பட்டு விஷம் வெளியாகும்.

===========================================================================

கொழுப்புக் கட்டிகள் தீர


சிலருக்கு உடம்பு முழுவதும் கொழுப்புக் கட்டிகள் இருப்பதைப் பார்த்திருப்போம். நவீன மருத்துவர்கள் வயதானால் இது கரைந்துவிடும் என பக்குவமாய் பதில் சொல்வார்கள். வேண்டுமானால் ஆப்ரேஷன் செய்து அகற்றிவிடலாம். என்பார்கள். ஒன்றா இரண்டா… உடம்பெல்லாம் கட்டிக்கு எங்கெல்லாம் ஆபரேஷம் செய்வது?

     வேங்கை இலை - 100 கிராம்
     வேங்கைப் பூ - 100 கிராம்
     மகிழம்பூ - 100 கிராம்
     ஆவாரம்பூ - 100 கிராம்
     வேப்பம்பூ - 100 கிராம்
     மாதுளம்பூ - 100 கிராம்

          ஆகியவற்றை சேகரித்து ஒன்றாகக் கலந்து நன்கு பொடியாய் அரைத்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து உடம்பெல்லாம் பூசி, தொடர்ந்து குளித்துவர கொழுப்புக் கட்டிகள் கொஞ்சங் கொஞ்சமாய்க் கரைந்துவிடும்.

========================================================================

பாத வெடிப்பை சரிசெய்ய இயற்கை முறையிலான சில எளிய வழிகள்: 

சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.

வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் பாத வெடிப்பு மறையும்.

கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகிய வற்றை கலந்து, பாத வெடிப்புகளில் பூசி வர, பாத வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். பாத வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும்.

பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொண்டாலே பாதி குறைந்து விடும். வீட்டிற்குள்ளும் காலணிகளை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது பாத வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.

வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.

மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இது பாத வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது.

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர பாத வெடிப்பு குணமாகும். கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு மறையும்.

No comments:

Post a Comment