Sunday, March 21, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −12

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −12

(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்.

156. குமார போஜனத்திற்கு உபநயனம் ஆகாத பையன் அமரக்கூடாது.

157. திருமணம், க்ருஹப்ரவேசம், உபநயனம் ஆகிய சடங்குகளின் போது, போடப்படுகின்ற கோலம் இரட்டை இழையில் இருக்க வேண்டும்.

158. இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டுமே ஸ்ரார்த்த உணவை உட்கொள்ள வேண்டும்.

159. வெள்ளைப் பூசணிக்காயை ஸ்ரார்த்தத்தில் உபயோகப்படுத்தக் கூடாது. ஏனெனில் இது "குஷ்மந்தன்" என்ற அரக்கனின் இறந்த உடலிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.

160. பெருங்காயத்தை ஸ்ரார்த்தத்தில் உயோகிக்கக் கூடாது. ஏனெனில் இது இந்திரனால் சபிக்கப்பட்ட மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

161. ஸ்ரார்த்தத்தில் கோஸ், பீன்ஸ் வகைகள், கொண்டைக்கடலை, கோவைக்காய், வெங்காயம், முருங்கைக்காய், சுரைக்காய், காளிப்ளவர் ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது.

162. ஸ்ரார்த்தத்திற்கு முதல்நாள் எந்தப் பூஜையும், ஹோமமும் செய்யக் கூடாது.

163. ஸ்ரார்த்தத்தில் கர்த்தாவானவர், ஸ்ரார்த்தம் முடிந்த பிறகே, தினம் செய்கின்ற பூஜைகளைச் செய்ய வேண்டும்.

164. ஸ்ரார்த்தம் செய்கிறவர் காபி, டீ, பால் போன்ற பானங்களை ஸ்ரார்த்தம் செய்வதற்கு முன் அருந்தக் கூடாது.

165. தாயாருக்கு ஸ்ரார்த்தம் செய்யும்போது, தந்தை உயிருடன் இருந்தால், அவருக்கு ஒரு பழமாவது சாப்பிடக் கொடுத்துவிட்டே, ஸ்ரார்த்தத்தை ஆரம்பிக்க வேண்டும்.

166. ஸ்ரார்த்தத்தை தடபுடலாகச் செய்யக் கூடாது. சாஸ்திரத்தை அனுசரித்து மட்டுமே ஸ்ரார்த்தம் செய்யப்பட வேண்டும்.

167. கம்பளியால் நெய்யப்பட்ட விரிப்பில் அமர்ந்து கொண்டு பித்ரு தர்ப்பணம் செய்யக் கூடாது.

168. இந்தக் கட்டுப்பாடுகள் மூத்த மகனுக்கு மட்டுமே பொருந்தும்.. இளைய மகன்களுக்கு இவை பொருந்தாது.

169. இடுகாடுவரை சென்று வந்தவர்கள், இரண்டு முறை நீராடாமலும், ஒரு ஸ்பூன் நெய்யாவது உட்கொள்ளாமலும், தமது க்ருஹங்களில் ப்ரவேசிக்கக் கூடாது.

170. பிறப்பு இறப்பு தீட்டுகளில் எப்பொழுதும் படுக்கின்ற படுக்கைகளைப் பயன்படுத்தக் கூடாது. 

அன்றியும் ஊறுகாய், உப்புஜாடி, சமையல் பாத்திரங்கள் இவற்றைத் தீண்டவும் கூடாது..


(வளரும்..)

No comments:

Post a Comment