(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −25
(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)
356. கருப்பு எள்ளை மடியில் வைத்துக்கொண்டு, தர்ப்பணம் செய்யக்கூடாது.
357. கரை இல்லாத வேஷ்டிகளை பூஜை, ஹோமம், ஸ்ரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்யும்போது பயன்படுத்தக் கூடாது.
அதுபோன்றே கரை இல்லாத வேஷ்டிகளை பிறருக்குத் தானமாகவோ, பரிசாகவோ கொடுக்கவும் கூடாது.
358. நதி, ஆறு போன்றவற்றுள் நின்றுகொண்டு அவற்றின் கரைகளில் தர்ப்பணத்தைச் செய்யக்கூடாது. அதுபோன்றே கரைகளில் நின்றுகொண்டு, தர்ப்பணத்தை நதியிலோ, ஆற்றிலோ செய்யக்கூடாது.
359. தாகத்தோடு இருப்பவர்க்குத் தண்ணீரை என்றும் மறுக்கக்கூடாது.
360. பாம்புப் புற்று, தேன்கூடு, குளவிக்கூடு, பறவைக்கூடு ஆகியவற்றைக் கலைக்கக்கூடாது. அப்படிச்செய்பவர்க்கு மழலைபாக்கியம் இல்லாமல் போய்விடும்.
361. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களையும், சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர்களையும் குருவாகவோ, ஆசிரியராகவோ வரிக்கக்கூடாது.
362. எழுத்துக்கள் சரஸ்வதி தேவியின் அம்சமாகக் கருதப்படுவதால், எழுத்துக்களோடு கூடிய பாத அணிகளை உபயோகிக்கக் கூடாது.
363. ஆழ்ந்த ஞானம் இல்லாமல் சாஸ்திர சம்பந்தமான விஷயங்களில் அறிவுரை வழங்கக்கூடாது.
364. காசியின் மண்முழுவதுமே சிவரூபமாகக் கொள்ளப்படுவதால், காசிக்குச் செல்பவர்கள் மண்ணால் ஆன விக்ரஹங்களையோ, மண்பாண்டங்களையோ வாங்கி வரக்கூடாது.
365. தனது ஜாதகத்தைத் தகுந்த காரணமில்லால் அடுத்தவர்க்குக் காண்பிக்கக்கூடாது.
366. தலைவாரிய பிறகு உதிர்கின்ற முடியை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அதை உடனேயே, வீட்டைவிட்டு வெளியில் எறிந்துவிட வேண்டும்.
367. தண்ணீரையும் நெருப்பையும் (கற்பூரம்/ஊதுவத்தி) ஒரேநேரத்தில் கைகளில் ஏந்தக்கூடாது.
368. தான் பிறந்த நக்ஷத்திரத்தையும், பிறந்த ராசியையும் தகுந்த காரணமில்லாமல், அடுத்தவர்க்குச் சொல்லக்கூடாது.
369. தெற்கு நோக்கி அமர்ந்துகொண்டு இராமாயண, பகவத்கீதை, பாகவதங்களைக் கேட்கக்கூடாது.
370. வீட்டில் பூஜை, ஹோமம் போன்றவை நடைபெறும்போது, உயர்ந்த ஆசனங்களில் (நாற்காலிகளில்) அமரக்கூடாது.
(வளரும்..)
No comments:
Post a Comment