Monday, March 15, 2021

நாமக்கல் லட்சுமிநரசிம்மர் ஆலய ரகசியங்கள்

 நாமக்கல் லட்சுமிநரசிம்மர் ஆலய ரகசியங்கள்...!

🙏அழியாத பொக்கிஷமாக 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையானஇ குடவரைக் கோவிலான லட்சுமிநரசிம்மர் கோவிலில் அவசியம் காண வேண்டிய பல பொக்கிஷங்கள் உள்ளது....!

அவைகள் :

🙏நாமக்கல் லட்சுமிநரசிம்மர் ஆலயத்திற்கு நேர் எதிர்புறம் ஆஞ்சநேய சுவாமி ஆலயம் உள்ளது.

🙏மலை அடிவாரத்தில் உள்ள குடைவரை கோவில் லட்சுமிநரசிம்மர் ஆலயம். லட்சுமிநரசிம்மர் ஆலயத்தில் உள்ள நரசிம்மர் சிலை மலையை குடைந்து உருவாக்கப்பட்டது.

🙏ஹிரண்ய வதம் செய்ததால் நரசிம்மரின் கை நகங்களின் கூர்மையை சுவாமி சிலையில் காணலாம். மற்றுமொரு அதிசயம் சுவாமியின் உள்ளங்கையில் ரத்த கறை இன்றும் காண முடியும்.

🙏வழக்கமாக லட்சுமிநரசிம்மர் ஆலயத்தில் சுவாமியின் மடியில் லட்சுமியை அமர்ந்த கோலத்தில் காணலாம். ஆனால் இங்கு லட்சுமிஇ சுவாமியின் மார்பில் உள்ளார்.

🙏குடவரை கோவில் என்பதால் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வது கிடையாது. உற்சவருக்கு தான் இங்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நாமகிரி தாயார் (மகாலட்சுமி) சன்னதி தனியாக கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது.

🙏மேலும் கணிதமேதை ராமானுஜம் அவர்களுக்கு ஒரு முறை தாம் மிகவும் கடினமாக உணர்ந்த ஒரு கணிதத்தைஇ நாமகிரித் தாயார் அவருடைய கனவில் தோன்றி தெளிவுபடுத்தினாராம்.

இது மட்டுமே நாமக்கலின் சிறப்பல்ல...

🙏நாமக்கல் நகரின் 10 மைல் தொலைவில் அமைந்திருக்கும் 'சதுரகிரி' என்கிற 'கொல்லி மலை'இ பல அரிய வகை மூலிகைகள் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

🙏கர்நாடக இசையில் மிகவும் சிறந்து விளங்கிய 'பல்லவி நரசிம்ம அய்யங்கார்' மற்றும் ஸ்ரீ நாமகிரி தாயார் மீது அற்புதமாகப் பாடல் பாடிய 'நரகரி ஆச்சார்' ஆகியோர் தோன்றிய பூமி இது. மேலும்இ தேசபக்தியில் மிகச் சிறந்து விளங்கிய 'நாமக்கல் கவிஞர்' பிறந்த ஊரும் இதுதான்.



No comments:

Post a Comment