வெந்தய தயிர் சாதம்.:
தேவையானப் பொருட்கள்.:
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
புளிப்பில்லாத தயிர் - 5 கப்,
கடுகு - 1ஃ4 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது),
கறிவேப்பிலை - 5 இலைகள்,
முந்திரி - 5,
தண்ணீர் - 5 கப்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை.:
👉 வெந்தய தயிர் சாதம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதித்ததும், அதில் அரிசியைப் போட்டு நன்கு குழைய வேக வைத்து, அதில் உப்பு சேர்த்து சூடாக வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, அதனுடன் சூடாகவுள்ள சாதம், தயிர், முந்திரி ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். சூடான, சுவையான வெந்தய தயிர் சாதம் ரெடி.
=========================================================================
வாழைத்தண்டு சட்னி.:
தேவையான பொருட்கள்.:
உளுந்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
புளி - நெல்லிக்காய் அளவு,
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,
எண்ணெய் , உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை.:
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
மறுபடியும் சிறிது எண்ணெய் விட்டு, வாழைத்தண்டை ஒரு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் பொடித்து அதில் வாழைத்தண்டுடன் உப்பு, புளி, சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
சுவையான வாழைத்தண்டு சட்னி ரெடி.
===========================================================================
மிளகு சீரக கார தோசை..!!
காலை வேளையில் நன்கு சுவையாகவும், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் உணவை சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மிளகு சீரக கார தோசை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இப்போது மிளகு சீரக கார தோசை எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - அரை கப்
தேங்காய் - 1 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மிளகாய் - 8
சீரகம் - 1 டீஸ்பு ன்
கடுகு - கால் டீஸ்பு ன்
மிளகு - 15
உப்பு - 1 டீஸ்பு ன்
பெருங்காயம் - சிறு துண்டு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
👉 மிளகு கார தோசை செய்வதற்கு முதலில் பச்சரிசி, துவரம் பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். இதனுடன் தேங்காய், மிளகாய், சீரகம், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
👉 பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சு டானதும், அதில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். தோசை ஊற்றும்போது, கலந்து வைத்துள்ள மாவில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து தோசைகளாக வார்த்து எடுத்தால் சுவையான மிளகு சீரக கார தோசை ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்.:
இதை இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்தோடும் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment