Saturday, March 20, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −22

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −22

(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

311. பெண்கள் திருமாங்கல்யத்தை மஞ்சள் சரடிலேயே கோர்த்து அணிய வேண்டும்.ப்ளாஸ்டிக்/நைலான் கயிறுகளில் அணிவது தவறான செயலாகும்.

312. பெண்கள் அங்கப்ரதக்ஷிணம் செய்யக்கூடாது. அவர்களது மார்பு பூமியில் படுவது, பூமாதேவிக்குச் செய்கின்ற அபசாரமாகும்.

313. திருமணமான பெண்கள் முடித்திருத்தம் செய்யவே கூடாது. இது அவர்களது கணவரின் ஆயுளைப் பாதிக்கும்.

314. வாசலில் கோலம் இடும்போது, நிலைப்படியிலும் சேர்த்துக் கோலமிட வேண்டும். நிலைப்படியில் கோலமில்லாமல் இருப்பது கெடுபலனைத் தரும்.

315. பெண்கள் இடுப்பும் கணுக்காலும் தெரியும்படி ஆடை அணியக்கூடாது.

316. ஜபம் செய்பவர், உணவருந்துபவர், உறங்குபவர், கையில் குழந்தையை வைத்திருப்பவர் ஆகியோரை வணங்கக் கூடாது.

317.  சூரியமண்டலத்தில் அனைத்து தெய்வீக சக்திகளும் அடங்கியிருப்பதால், நமஸ்காரம் செய்யும்பொழுது, பின்னங்கால்கள் சூரியனை நோக்கி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

318.தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்யக் கூடாது.

319. கரங்களில் பூஜைக்குரிய சாமன்களையோ, மலர்களையோ வைத்திருப்பவருக்கு மரியாதை செய்வதோ, நமஸ்கரிப்பதோ கூடாது. அவ்வாறு செய்தால், அந்த திரவியங்கள் (பொருட்கள்) "நிர்மால்யம்" ஆகிவிடும். பூஜைக்குப் பயன்படுத்துகின்ற தகுதியையும் அவை இழந்துவிடும்.

320. நமஸ்காரம் செய்யும்பொழுது, பின்னங்கால்கள் பெரியவர்களை நோக்கி நீட்டியிருக்கக் கூடாது.

321. இறப்புத் தீட்டின்பொழுது, யாரையும் நமஸ்காரம் செய்யக்கூடாது. யாருடைய நமஸ்காரத்தையும் ஏற்றுக்கொள்ளவும் கூடாது.

322. வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது பூனை வலமிருந்து இடமாகச் சென்றால், புறப்படுவதைத் தள்ளிவைக்க வேண்டும்.அதுவே, பூனை இடமிருந்து வலமாகச் சென்றால் அது சுபசகுனமாகும்.

323. அனைத்து புண்ணிய நதிகளும் துலா (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் கலந்துவிடுவதாக ஐதீகம் இருப்பதால், துலா மாதத்தில் காவிரிக்கரையருகில் வசிப்பவர்கள் காசி, கயா, ஹரித்வார் போன்ற புண்ய க்ஷேத்திரங்களுக்குச் செல்லக்கூடாது.

324. ஒரு காரியமாக வெளியே செல்லும்பொழுது, "எங்கு போகிறாய்?" என்று நம்மை எவரேனும் வினவினால், அந்தக் காரியத்தைச்  சற்றுநேரத்திற்குத் தள்ளிவைத்து, பிறகே செய்ய வேண்டும்.

325.கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் பிரயாணம் மேற்கொள்ளும்பொழுது, தெற்கு முகமாக முதலில் நகரக் கூடாது.

(வளரும்..)

No comments:

Post a Comment