மீச வெச்ச பெருமாளும் பின்னே சாம்பார் க்ரீடை இட்லியும்..
¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿
போன வியாழக்கிழம..
ட்ரிப்ளிகேன்ல ஒரு வேல இருந்துச்சு. மத்யானம் 3 மணிக்கு ரெண்டு பேருமா வேளச்சேரிலேர்ந்து ட்ரெய்ன்ல போனோம்.
ரொம்ப சுமாரான கூட்டம் , ட்ரெய்ன்ல !.
ட்ரிப்ளிகேன் ஸ்டேஷன் வந்ததும் எறங்கி பிளாட்பாரத்ல நடந்தோம். பிளாட்பார்ம்ல ஆளே கெடையாத்..ஆனா , அங்க சுவத்ல இருக்கற ராட்ஷச ஃபேன்ங்கள்லாம் சுத்திட்டு இருந்துச்சு !.
எஸ்கலேட்டர்ல எறங்கலாம்னு போனா அத ஆஃப் பண்ணி வெச்ருந்தாங்க !. சரின்னு படிக்கட்டுங்க வழியா எறங்கி ஸ்டேஷனுக்கு வெளில வந்து போக வேண்டிய எடத்துக்கு போனதுல வந்த வேல முடிஞ்சுது !.
சரி..இவ்ளோ தூரம் வந்துட்டு நம்ம மீச வெச்ச பெருமாளயும் தரிசனம் பண்ணிடலாமேனு கோவிலுக்கு நடந்தோம்.
வெளில கோயில் குளத்ல தண்ணியும் இருந்துச்சு.
கோயில அப்பத்தான் தொறந்திருந்ததால உள்ளயும் கூட்டம் கொறைச்சலாவே கண்ல பட்டுது.எல்லா பிரகாரங்களயும் சுத்தி மெய்ன் பெருமாள்ட்ட வந்தோம்.
நன்னா நின்னு நிதானமா சேவிக்க முடிஞ்சது. அவருக்கு நம்பள தெர்யனுமேங்கறத்துக்கோசரம் போட்டுட்ருந்த மாஸ்க கொஞ்சம் கீழ எறக்கி விட்டோம் !.
திருப்த்தியான தரிசனம் !.
வெளில வந்தோம்.
ட்ரிப்ளிகேன்… வாழ்க்கையோட ஆரம்ப பருவத்லேர்ந்து சுமார் 22 வருடங்கள லவ்வபிளா நான் செவழிச்ச ஏரியா !. பொறந்து வளர்ந்த இடம்
நாங்க குடியிருந்த சில தெருக்கள காமிச்சேன் வூட்டம்மாக்கு. வீடுங்கள்லாம் பிளாட்டுங்களா தன்னை உருமாற்றிக் கொண்டதால !.
செங்கல்வராயன் தெருவோட இந்த முனைல திரும்பினா பிரேமா நிவாஸ் இருந்த ஓட்டல் இப்ப பார்க்கறச்ச ஆனந்தாவா மாறி இருந்துச்சு. இந்தப் பக்கமா கெல்லட் ஹை ஸ்கூல்..எதிர்க்க அதே ஜீவா காபி கடை !.
ட்ரிப்ளிகேன்ல இருந்தவரைல இங்கதான் காபி பொடி வாங்குவோம் , பீபரி.
“ நின்னு அரைச்சு குடுக்கறத வாங்கு..ஏற்கனவே அரைச்சு குடுத்தத வாங்கின்டு வராத….” - அம்மாவோட குரல் இப்ப அந்த கடைய பார்க்கறச்ச அசரீரியா கேட்டுச்சு !.
அப்டியே டி.பி.கோயில் தெருவுக்கு நடந்தோம்.
ராக வேந்திர ஸ்வாமி கோயில்.
“ ஏங்க..வியாக்கிமயும் அதுவுமா ராகவேந்திர ஸ்வாமி கண்ல பட்ருக்கார் – வாங்க , உள்ள போகலாம்..”.
போனோம்.
ஸ்பீக்கர் வழியா ‘ ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ…’.
தரிசனம் பண்ணிட்டு சுத்தி வந்து அங்கயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து அந்த ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ – வ கேட்டுன்டே கூடவே சொன்னோம் !.
எழுந்து வெளில வந்து நடந்தோம். எதிர்க்க இருந்த மகாகவி பாரதி இருந்த வீட்ட , வூட்டம்மாட்ட காம்ச்சு சொன்னேன்.
அங்கேர்ந்து அப்டியே நடந்தோம்..
அந்தக் கால ட்ரிப்ளிகேன் ஹைரோடு இப்ப ‘ காயிதே மில்லத் சாலை ‘ யா நாமகரணத்த மாத்தி இருந்துது !.
ரத்னா கஃபே !.
உள்ள நுழைஞ்சோம்.
“ ஏங்க..இப்ப எதுக்கு ஓட்டல்..?.”.
“ சர்யாப்போச்..ட்ரிப்ளிகேன் வந்துட்டு பெருமாள சேவிச்சுட்டு இந்த ரத்னா கேஃப்ல சாம்பார் க்ரீடை பண்ணிட்ருக்கற இட்லிங்கள சாப்டாம போனா , அந்த பெருமாளே கோச்சுப்பார்..ச்சும்மா வாம்மா..!.”.
டேபிள்க்கு வந்து உட்கார்ந்தோம்.தண்ணிய கொண்டு வெச்சவர்ட்ட வெந்நீர் கொண்டு வர சொன்னோம். மாத்தி கொண்டு வந்தார்.
வந்த சர்வர்ட்ட ரெண்டு பிளேட் சாம்பார் இட்லி ஆர்டர் பண்ணேன்.
சுமார் 35 வருஷங்களுக்கு முன்னால…
அப்பல்லாம் இங்க ஒரு பிளேட் சாம்பார் இட்லி 25 பைசா.ரெண்டு இட்லிங்கள தட்ல கொண்டு வெப்பாங்க. அதுக்கப்புறமா எவர்சில்வர் மக்கு சாம்பார இட்லிங்க மேல கொட்டி அபிஷேகம் பண்வார் சர்வர். கூடவே ரெண்டு ஸ்பூனுங்களையும் குடுப்பார்.
நோ சட்னி , சாம்பார் இட்லி ஆர்டர் பண்றவங்களுக்கு !.
ஆனா , தேவைப்படாத். ஒரு ஸ்பூனால சாம்பாரால அபிஷேகமான இட்லிய அழுத்தி இன்னொரு ஸ்பூனால இட்லிய துன்டம் போட்டு லபக்ற லாவகம் இருக்கே…ட்ரிப்ளிகேன் வாசிகள் அந்த பேரானந்தத்த அனுபவிச்சவங்க !.
அதே மாதிரியே இப்ப தட்ல கட் பண்ண வாழ இலைய போட்டு அதுல இட்லிங்களோட சர்வர் வந்தார். டேபிள்ல தட்டுங்கள வெச்சுட்டு மட மடன்னு தன் கைல வெச்ருந்த சூடான சாம்பார் நிறைஞ்ச எவர்சில்வர் மக்க இட்லிங்க மேல சாய்ச்சார்.
சின்ன வெங்காயங்க மிதக்க அந்த சாம்பார் அந்த தட்டுக் குழிய நிரப்ப முகத்ல போட்ருந்த மாஸ்கயும் கடந்து மூக்குல பிரவேசிக்க…
ஞாபகமா மாஸ்க கழட்டிட்டு சாப்ட ஆரம்பிச்சோம்.
“ வேற எதாச்சும் வேணுமாம்மா..?.”.
“ காபி போதுமே..” னு சொன்னதால காபிய ஆர்டர் பண்ணோம்.
நுரை பொங்க பொங்க ஃபில்டர் காபி காலி டவரால இருந்த டம்ப்ளர்ல வந்துது. பார்க்கவே நன்னா இருந்துது !.
சில ஓட்டல்ங்கள டவரால காபிய கொட்டி அதுக்குள்ளயே டம்ளரயும் கவுத்து வெச்சு ரசன கெட்டத்தனமா கொண்டு வெப்பாங்க..பார்க்கவே எரிச்சலாவும் !.
பில் வந்துச்சு.
“ என்ன இருந்தாலும் ரெண்டு இட்லி சாம்பார்க்கு 57 ரூவா ஜாஸ்த்திதானமா ? “.
" அந்த பணம் இட்லிக்கு இல்ல – சாம்பார்க்கு..! “.
அட !.செய்யாறுக்கு அந்தப் பக்கம் இருந்தவங்களுக்கு கூட இந்த ரத்னா கேஃப் சாம்பார் மகிமை தெர்ஞ்சிருக்கு !.
ரொம்ப வருஷங்களுக்கு அப்புறமா இந்த ட்ரிப்ளிகேன் ஸ்தலத்துக்கு வந்து கோயில்ங்க + பிரசித்து பெற்ற சாம்பார் இட்லிங்கள சாப்ட்ட திருப்தியோடயும் அங்க செலவழிச்ச என்னோட பழைய சந்தோஷ நினைவுங்களோடயும் மனசுல ஏத்தின்டு பஸ் ஏறினோம் !.
--மடிப்பாக்கம் வெங்கட்.
No comments:
Post a Comment