வாழைத்தண்டு அடை :
தேவையான பொருட்கள்:
பொருள்அளவு நறுக்கிய வாழைத்தண்டு1 கப் பொட்டுக்கடலை மாவு1 கப் பெரிய வெங்காயம்2 பச்சை மிளகாய்2 இஞ்சி விழுது1 டீஸ்பூன் கறிவேப்பிலை1 கொத்து
செய்முறை :
வாழைத்தண்டை நறுக்கி வேகவைத்து பிசைந்து கொள்ளவும்.
அத்துடன் பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அதனை வடைகளாக தட்டி, தோசை கல்லில் போட்டு, சுற்றி எண்ணெய் விட்டு வேகவைத்து இறக்கவும்.
வாழைத்தண்டு உடலுக்கு நல்லது என்பதால் அதை சாதாரணமாக சாப்பிட விரும்பாதவர்கள் அடையாக செய்து சாப்பிடலாம்.
வாழைத் தண்டு அடை மிருதுவாகவும், மணமாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment