கல்லூரி சொற்பொழிவு - சுஜாதா
திருச்சி சீதா லட்சுமி ராமஸ்வாமி (SRC) கல்லூரியில் கம்ப்யூட்டர்களைப் பற்றி எளிமையாகப் பேசிக் கொண்டிருந்தேன். முன்வரிசையில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்து, "உன் பேர் என்ன?" என்று கேட்டேன்.
அந்தப் பெண் நாணம், தயக்கம், அருகாமைப் பெண்ணின், 'சொல்லுடி' இவைகளுக்குப் பிறகு, "கலைச்செல்வி" என்றாள்.
அடுத்து, "இன்னிக்கு காலைல என்ன சாப்பிட்டே?" என்றேன்.
யோசித்து 'மோர் சாதம்' என்று சொல்லி சிரித்து விட்டு, சங்கிலியைக் கடித்தாள்.
அடுத்து, "போன மாசம் 20ம் தேதி காலையில என்ன சாப்பிட்டே?" என்று கேட்டேன்.
நோக்கம் கலைச்செல்வியின் உணவுப் பழக்கங்களை அறிந்து கொள்வதல்ல. கம்ப்யூட்டரில் இரண்டு வகை ஞாபகங்கள் உள்ளன. தற்காலிக ஞாபகம்; நிரந்தர ஞாபகம் (RAM & ROM).
நமக்கு இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்று ஞாபகம் இருக்கும். போன மாசம் 20ம் தேதி என்ன சாப்பிட்டோம் என்பது நினைவிருக்காது.
அது போல் என்று உதாரணம் காட்டுவதற்காக,
"சொல்லு கலைச்செல்வி, போன மாசம் 20ம் தேதி காலைல என்ன சாப்பிட்டே?" என்றேன்.
அந்தப் பெண் தெளிவாக, "மோர் சாதம். எங்க வீட்டில எப்பவுமே மோர்சாதம் தான் ஸார்" என்றாள்.
என் சொற்பொழிவு தடம் புரண்டது.
=======================
Incidentally, நண்பர் Desikan Narayanan சென்ற வார கல்கி இதழில் இந்த விஷயத்தைப் பற்றி அவர் பாணியில் சுவைபட எழுதியிருந்தார்.
No comments:
Post a Comment