Thursday, March 25, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −26

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −26

(ஆசிரியர் −திரு.V.ராஜகோபால கனபாடிகள்..)


371. இருசக்கர ஊர்தியிலோ, காரிலோ பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது, இறைஊர்வலம் வந்தால், வண்டியைவிட்டு இறங்கி, கரம்குவித்து மரியாதை செய்தபிறகே மேலே பயணிக்க வேண்டும்.

372. இறைஊர்வலங்களை வலம்வரும்பொழுதும், வந்தனை செய்யும்பொழுதும்  பாதஅணிகளைத் தவிர்க்க வேண்டும். 

373. தேர்வடத்தைத் தாண்டிச்செல்வதோ, மிதித்தலோ கூடாது.

374. தங்க, வெள்ளி ஆபரணங்களைத் தவிர்த்து, ஒரு தெய்வத்திற்குப் படைக்கப்பட்ட புஷ்பத்தையோ பழங்களையோ, மாலைகளையோ, வஸ்திரத்தையோ வேறு தெய்வத்திற்குப் படைக்கக் கூடாது.

375. ஒரு தெய்வத்திற்குக் கற்பூர தீபாராதனை செய்து, கண்களில் ஒற்றிக்கொண்ட பிறகு, அதை வேறு தெய்வத்திற்கு உபயோகிக்கக் கூடாது.

376. தீபம், கற்பூரம் இவற்றை ஒரு தெய்வத்திற்குக் காட்டிய பிறகு, அவற்றிலிருந்து வேறு தீபமோ, கற்பூரமோ ஏற்றக்கூடாது.

377. பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுக்கு முதல்நாள் சேகரித்த நீரைப் பயன்படுத்தக்கூடாது.நீராடியபிறகு, அன்று சேகரித்த நீரையே பயன்படுத்த வேண்டும்.

378. கன்று அருந்தாமல் கறந்த பாலை, அபிஷேகத்திற்கோ, நைவேத்தியத்திற்கோ பயன்படுத்தக் கூடாது.

379. இறை விக்ரஹங்களுக்குப் பால், தேன் அபிஷேகங்கள் செய்யும்போது, ப்ளாஸ்டிக் கவரிலிருந்து/குப்பியிலிருந்தும் நேரடியாக உபயோகிக்கக்கூடாது. அவற்றை பித்தளை அல்லது வெள்ளிப் பாத்திரங்களில் சேகரித்து வைத்துக்கொண்டே பயன்படுத்த வேண்டும்.

380. சங்கை நீரில் முழுகவைத்து, நீரை நிரப்பி பூஜையோ, அபிஷேகமோ செய்யக்கூடாது.

ஏனெனில் நீரின்தூய்மை, சங்கின் பின்பகுதி நீரைத்தொடும்பொழுது தொலைந்து விடுகிறது.

381. தேங்காயை உடைத்து ஒருமுறை நைவேத்யமாகக் காண்பிக்கப்பட்டுவிட்டால், பிறகு அந்தத் தேங்காயைக் கொண்டுச் சமைத்த உணவை, மீண்டும் நைவேத்தியம் செய்வதற்குப் பயன்படுத்தக்கூடாது.

382. மகாலக்ஷ்மி/மஹாலக்ஷ்மியோடு கூடிய மஹாவிஷ்ணு படங்களை வீட்டின் உட்புறம் நோக்கி அமையுமாறு பொருத்த வேண்டும். அப்பொழுதுதான் லக்ஷ்மிகடாக்ஷம் முழுமையாகப் பெற்று அந்த இல்லம் சுபீக்ஷம் அடையும்.

383. சாளக்ராமம், பாணலிங்கம், ஸ்படிகம், சோனபத்ரம் (கணபதி), ஸ்வர்ணமுகி (அம்பாள்) ஆகியவற்றை விலைக்கு விற்கக் கூடாது. 

ஆனால் அவற்றைத் தானமாகவோ, பரிசாகவோ அடுத்தவர்க்கு அளிப்பதில் தவறு ஏற்படாது.

384. பூஜை, ஜபம், த்யானம், கோயிலில் இறை வழிபாடு இவற்றைச் செய்யும்பொழுது, தோலினால் உண்டாக்கப்பட்ட கைப்பை, பெல்ட், பர்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

385. புனிதமான இறை ப்ரசாதத்தையும், பூஜையில் நைவேத்தியம் செய்யப்பட்ட வஸ்துக்களையும் சாப்பாட்டு மேஜையில் (dining table) வைக்கக் கூடாது.

(வளரும்..)

No comments:

Post a Comment