Saturday, March 20, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −20

 (தெரிந்து கொள்ளலாமா?..)


(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

(பகுதி −20..)

281. சாப்பிடுகின்ற வாழைஇலையின் மேல், நீர் அருந்தும் பாத்திரத்தை வைக்கக் கூடாது. சாப்பிடுபவருக்கு இடதுபுறமும் நீர்பாத்திரத்தை வைக்கக்கூடாது. அதை எப்பொழுதும் வலதுபுறமே வைக்க வேண்டும்.

282. இலையில் தனியாக உப்பை இடக்கூடாது. அதை நீருடனோ, மோருடனோ கலந்து ஒரு கரண்டியால் இடுவதில் தவறில்லை.

283. தட்டை மடியில் வைத்துக் கொண்டு, உணவருந்தக்கூடாது.

284. ஒரு குழுவாக சாப்பிட அமரும்போது, அதில் மூன்று பேருக்கு மேல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.மூன்று இலைகளிட்டு, என்றுமே உணவைப் பரிமாறக் கூடாது.

285. விருந்தினருக்கு அளிக்காமல் உணவை சாப்பிடக்கூடாது. ஆனால், அவர்களோடு அமர்ந்து உண்பதில் தவறில்லை.

286. வீட்டு எஜமானரோடு சேர்ந்து உணவரும்போது, விருந்தாளிகள் அவரது வலதுபுறமே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். எஜமானருக்கு இடது புறம் விருந்தாளிகள் அமர்வது தவறாகும்.

287. இடது கையை ஊன்றிக்கொண்டு உணவருந்தக் கூடாது.

288. ஏகாதசி, பௌர்ணமி விரதங்கள் இருப்பவர்கள் அரிசியினால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

289.,வேறு ஒருவர் பயன்படுத்திய தட்டில் உணவருந்தக் கூடாது. 

ஆனால் வெள்ளி, தங்கம் இவற்றால் செய்யப்பட்ட தட்டுகள் இதற்கு விதிவிலக்காகும்.

290. வாயிற்படியில் தலை வைத்துப் படுக்கக் கூடாது.

291. பூணூல் உந்தி (navel point)க்குச் சரியாக அமைய வேண்டும்.உந்திக்கு மேலோ, கீழோ இருப்பது சரியல்ல.

292. ஶ்ரீருத்ரம், சமகம், புருஷஸுக்தம், ஶ்ரீஸுக்தம் ஆகியவற்றைக் குருமுகமாகவே கற்க வேண்டும். தானாக, புத்தகத்தைப் பார்த்து படித்து வருவது கூடாது.

293. தான் சேர்ந்த வேத சாகையை முழுமையாகக் கற்றறியாமல், அடுத்த வேத சாகைகளை அறிய முயற்சிக்கக் கூடாது.

294. பூணூலை கையில் தொட்டுக் கொண்டு ஜபங்களைச் செய்யக் கூடாது.

295. வேதச் சடங்குகளைச் செய்து முடித்த பிறகு, பவித்ரத்தில் உள்ள முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்.  அப்படிச் செய்யாவிடில் செய்த கர்மாவிற்கு உண்டான பலன் கிடைக்காமல் போய்விடும்.

(வளரும்..)

No comments:

Post a Comment