Saturday, March 27, 2021

 அறிவியல் தகவல்கள்...


நமது ரத்த அழுத்தம் எப்படி அளவிடப்படுகிறது? 

sphygmomanometer

என்ற கருவி நமது ரத்த அழுத்தத்தை

அளவிட உதவுகிறது. காற்று நிரப்பும்

பட்டையை நமது கையில் ஒட்டி, புயநாடியை (brachial artery) அழுத்தும் வரை காற்று நிரப்பப்படுகிறது. இதனால் ரத்த ஓட்டம் நிறுத்தப்படுகிறது. பின் காற்று

விடுவிக்கப்பட்டு ரத்த ஓட்டம் மீண்டும் ஓடத்தொடங்கும் போது நாம் ரத்தத்தில்உள்ள அழுத்தத்தை அளவிடுகிறோம்.

பட்டையில் இருந்து காற்று  விடுவிக்கப்பட்டவுடன் நமது கையில் ரத்த ஓட்டம் தொடங்கும் போது அளவிடப்படும் அழுத்தம் systolic pressure எனப்படும். இது நமது இதயம் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தம்

ஆகும். பட்டையில் காற்று முழுமையாக வெளியேற்றப்பட்டு ரத்த ஓட்டம் சீரானவுடன் அளவிடப்படும் அழுத்தம் diastolic pressure எனப்படும். இது நமது இதயம் விரிவடையும்போது ஏற்படும் ரத்த அழுத்தம் ஆகும்.

உடலில் ரத்த அழுத்தத்தை அளவிடும்

Cuis, sytolic pressure 140 mmHg-56 அதிகமாகவும், diastolic pressure

90mmHg-க்கு அதிகமாகவும் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்று

பொருள். sytolic pressure 90 mmHg-க்கு குறைவாகவும், diastolic pressure

60mmHg-க்கு குறைவாகவும் இருந்தால் குறைந்த இரத்த அழுத்தம் இருக்கிறது  என்று பொருள்.



No comments:

Post a Comment