Tuesday, March 23, 2021

முட்டைக்கோஸ் கூட்டு

 முட்டைக்கோஸ் கூட்டு

தேவையான பொருட்கள் 

 முட்டைகோஸ், மெல்லியதாக நறுக்கியது - 1/2 கப்.
பச்சை மிளகாய், நீளமாக நறுக்கியது - 3.
இஞ்சி, துண்டுகளாக்கி நசுக்கவும் - 1/2 அங்குல துண்டு.
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 டீஸ்பூன்.
துவரம் பருப்பு வேக வைத்தது - 3 டீஸ்பூன்.
உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்.
சீரகம் - 1/4 டீஸ்பூன்.
அரிசி மாவு - 1/4 டீஸ்பூன்.

தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - தேவைக்கேற்ப.
கடலை பருப்பு - 1 1/2 டீஸ்பூன்.
எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை விளக்கம் 

முதலில் மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின் குக்கரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும்.மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

உடனே ஆவியை வெளியேற்றி விட்டு குக்கரை திறக்கவும்.அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து 

மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.பின் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

அதன் பின் கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கூட்டின் மேல் கொட்டவும்.தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை மேலே தூவவும். இப்போது சுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார்.

🧜‍♀️சுபயாழ்னி🧜‍♀️



No comments:

Post a Comment