(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −24
(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)
341. மற்றவரின் கால்கள் படுமாறு தர்ப்பணம் செய்கின்ற ஜலத்தை விடக்கூடாது.
342. மாளயபக்ஷத்தில் ச்ரார்த்த தினம் வருமானால், ச்ரார்த்தம் செய்தபிறகே, மாளயபக்ஷ தர்ப்பணத்தைச் செய்ய வேண்டும்.
343. ச்ரார்த்தம் செய்கிற அன்று வாசலில் கோலமிடக்கூடாது.
344. ச்ரார்த்த இலையில் அமருகின்ற ஸ்வாமிகளின் கால்களை உட்கார்ந்து கொண்டு அலம்பக்கூடாது. பயபக்தியுடன், குனிந்தே அவர்களது கால்களை அலம்ப வேண்டும்.
345. ஸ்ரார்த்தத்திற்கு உண்டான பக்ஷணங்கள், ஊறுகாய், தயிர் ஆகியவற்றை அன்றே தயாரிக்க வேண்டும். முதல்நாள் தயாரித்ததை ஸ்ரார்த்தத்தில் பயன்படுத்தக்கூடாது.
346. மாளயபக்ஷ ஸ்ரார்த்தத்தை, சந்த்யாவந்தனம் போன்ற நித்யகர்மங்களை அனுஷ்டித்த பிறகு, காலை 8.20 மணிக்குப் பிறகே அனுஷ்டிக்க வேண்டும்.
347. தர்ப்பணம் செய்யும்போது, ஆவாஹனம் செய்த கூர்ச்சங்களை, மீண்டும் வேறு இடத்தில் மாற்றி வைக்கக்கூடாது.
348. மாசிகம், சோதகும்பம் போன்ற அபரகாரியங்களை மூத்த பிள்ளையே செய்ய வேண்டும்.
349. ஆசௌசம் எனப்படுகின்ற பிறப்பு இறப்பு தீட்டுகளின்போது, தர்ப்பணதினங்கள் வந்தாலும், தர்ப்பணம் செய்யக்கூடாது.
350. ஸ்ரார்த்த உணவில் மிளகாய் சேர்க்கக்கூடாது. அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம்.
351. ச்ரார்த்தம் செய்கின்ற கர்த்தாவானவர் அதற்கு முந்தைய பக்ஷத்தில் (பதினைந்து நாட்கள்) முகச்சவரம், எண்ணெய்க்குளியல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது.
352. போதாயன சூத்திரத்தைச் சேராதவர்கள், போதாயன அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது.
353. ஸ்ரார்த்தம் அல்லது தர்ப்பணம் செய்கின்ற கர்த்தாவானவர், அன்றைய தினத்தில் காபி, பால் போன்றவற்றை, கர்மாக்களை அனுஷ்டிப்பதற்கு முன்னே, அருந்தக்கூடாது.
354. காகத்திற்கு வைக்கின்ற பிண்டத்தை உடைக்காமல் முழு உருண்டையாகவே வைக்க வேண்டும்.
355. மூத்த சகோதரனுக்கோ, தாய்வழி பாட்டனாருக்கோ ச்ரார்த்தம் செய்யும்போது, அடுத்தநாள் தர்ப்பணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மீதி ஸ்ரார்த்தங்களைச் செய்யும்போது தர்ப்பணம் அவசியம் செய்யவேண்டும்..
(வளரும்..)
No comments:
Post a Comment