"ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை"
("பூரானை ஒண்ணும் செய்யாதே....ஹிம்சை செய்யாதே. ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு....பூரான் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை... ஒண்ணை அழிச்சாலும்,ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி...")
கச்சி மூதூர் கருணாமூர்த்தி.
தொகுப்பாளர்-சத்யகாமன்.
சாயங்காலம் ஐந்து மணி பெரியவாள் ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.
அவர்கள் வஸ்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார்.
பரபரப்புடன் கைகைளை நீட்டி,காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.
என்ன அவசரம்" என்றார்கள் பெரியவாள்
பெரிய சடைப்பூரான் இருக்கு,வஸ்திரத்திலே...."
பெரியவா,கண்ணனிடம் வஸ்திரத்தைக் கொடுத்தார்.
"பூரானை ஒண்ணும் செய்யாதே....ஹிம்சை செய்யாதே... ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு....பூரான் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை.... ஒண்ணை அழிச்சாலும்,ஒரு குலத்தையே நாசம் பண்ணின மாதிரி..."
பூரான்....ஒரு விஷ ஜந்து. அந்த உயிரிடமும் கருணை, பெரியவாளுக்கு.
No comments:
Post a Comment