Saturday, March 20, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −21

 (தெரிந்து கொள்ளலாமா?..)

(தர்ம சாஸ்திரம் பகுதி −21

(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

296. சந்தியாவந்தனத்தின்போது ஜபிக்கின்ற காயத்ரி மந்திரத்தை காலையில் அமர்ந்துகொண்டும், மாலையில் நின்றுகொண்டும் சொல்லக் கூடாது.

காலையில் சூரியனுக்கு நேராக நின்றுகொண்டும், மாலையில் ஒரு சிறிய பாயில் அமர்ந்துகொண்டும் ஜபிக்க வேண்டும்.

297. கோபி சந்தனத்தை நெற்றியிலிட்ட பிறகு, அதன்மீது விபூதியை இடக்கூடாது.

298. நவக்ரஹ ஹோமம், கணபதி ஹோமம் செய்பவர்கள், அன்று முகச்சவரம் செய்யக் கூடாது.

299. நடந்து கொண்டும், பயணம் செய்யும்போதும், காயத்ரி மந்திரத்தை ஜபிக்கக் கூடாது.

300. இறந்தவருக்குரிய சடங்குகளைச் செய்யும் கர்த்தாவானவர், மோதிரம், காதணி, கழுத்தணி போன்ற எந்த நகைகளையும் அணிந்து கொள்ளக் கூடாது.

301. வெள்ளி மோதிரத்தை அணிந்தால், தந்தைக்கும், மூத்த சகோதரருக்கும் ஆயுள் குறைவை ஏற்படுத்தும். அதனால் விரல்களில் வெள்ளி மோதிரத்தை அணியக் கூடாது.

302. தாய்தந்தை உயிருடன் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை முடித்திருத்தம் செய்து கொள்ளக்கூடாது.

303. மாத்யானிகம் செய்யாமல், ப்ரம்மயக்ஞ தர்ப்பணத்தை செய்யக் கூடாது.

304. "ஆபோசன"த்திற்கான நீரைத் தானே கைகளில் விட்டுக்கொள்ளக் கூடாது. மனைவியை கைகளில் நீர் விடச்சொல்லியே, ஆபோசனம் செய்ய வேண்டும்.

305. பரிசேஷனம் செய்த பிறகு, "பிராணாய ஸ்வாஹா" என்று சொல்லி எடுத்துக்கொள்ளப்படுகின்ற உணவு பற்களில் படக்கூடாது.

306. சபரிமலைக்கு மாலை அணிந்தவர்கள், நித்யபூஜை, சந்தியாவந்தனம், பித்ரு தர்ப்பணம் போன்ற  கர்மாக்களை விடாமல் செய்ய வேண்டும்.

307. சிவ பூஜையை விபூதி தரிக்காமலும், ருத்ராக்ஷம் அணியாமலும் செய்யக் கூடாது.

308.படுத்துக்கொண்டு ஶ்ரீருத்ரம், புருஷஸுக்தம், ஶ்ரீஸுக்த மந்திரங்களை ஜபிக்கக் கூடாது. இந்தத் தவறைச் செய்பவர்கள் அடுத்த பிறவியில் மலைப்பாம்பாகப் பிறப்பர்.

309. திருமணமான பெண்கள் சந்தனக்கல்லில் சந்தனம் அரைப்பதைச் செய்யக் கூடாது.

310. பூஜை செய்யும்போது ஸ்டிக்கர் பொட்டுகளை உபயோகப்படுத்தாமல், குங்குமம் அணிந்தே பெண்கள் பூஜை செய்ய வேண்டும்.

(வளரும்..)

No comments:

Post a Comment