ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -17
41)காமக்கூர் ராமர்பஜனை கோயில்...
★ராமர்பஜனை கோயில் தமிழக திருவண்ணாமலை மாவட்டம், காமக்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற பிரிவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது பரம்பரை அல்லாத நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப் படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது.
42)காட்டாம்பூண்டி ராமசாமி கோயில்...
★காட்டாம்பூண்டி ராமசாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், காட்டாம்பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற பிரிவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத ஒரு அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இந்த
கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.ராமநவமி முக்கிய திருவிழாவாக இங்கு நடைபெறுகிறது.
43)சின்னதச்சூர் பட்டாபிராமஸ்வாமி கோயில்...
★இந்த ஶ்ரீராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், சின்னதச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்த ஶ்ரீபட்டாபிராமர் கோவில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
44)கோதண்டபுரம் கோதண்டராமர் கோயில்...
★கோதண்டபுரம் கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், கோதண்டபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். அருள்மிகு கோதண்டராமர் கோவில், கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத ஒரு அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. ராமநவமி முக்கிய திருவிழாவாக இங்கு நடைபெறுகிறது.
45) அருக்கன்குளம் ஶ்ரீகாட்டுராமர் கோவில்...
★திருநெல்வேலிக்கு அருகில் அருகன்குளம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, காட்டுராமர் ஆலயம். இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, ‘காட்டுப் பகுதியில் இருப்பதால் இப்படியொரு திருப்பெயர் வந்திருக்கலாம்’ என்றே எண்ணத் தோன்றும். ஏனெனில், அமைதியான வனச்சூழலிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஆனால், ஸ்தல புராணம் வேறோர் அற்புதமான காரணத்தைச் சொல்கிறது.
★ராவணன், சீதையைக் கடத்திச் செல்லும்போது, அவனைத் தடுத்து போராடிய ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான். குற்றுயிராகக் கிடந்த ஜடாயு, ராமனைத் தரிசித்து விவரம் சொன்னபிறகு மோட்ச கதி அடைந்தார். அவருக்கு ஸ்ரீராமன் மோட்சம் அளித்த இடமாக பல திருத்தலங்கள் கருதப்படுகின்றன. அவற்றில் இந்தத் தலமும் ஒன்று.
★அப்படி, ஸ்ரீராமனைத் தரிசித்த ஜடாயு, அவருடைய மணக் கோலத்தைத் தனக்குக் காட்டும்படி வேண்டினாராம். ஆனால், அப்போது சீதாதேவி இலங்கையில் இருந்ததால், தமது மணக் கோலத்தைக் காட்டமுடியாத ராமபிரான், ஸ்ரீலட்சுமி நாராயணராக அருள்கோலம் காட்டினாராம். பிறகு, ஸ்ரீராமன் இலங்கை போர் முடித்து பின் அங்கு இருந்து திரும்பும்போது, சீதாதேவி சமேதராக அந்த ஜடாயுவுக்கு மணக்கோலத்து காட்சியை காட்டியருள் புரிந்தாராம். இவ்வாறு திருமணக் கோலத்தைக் காட்டி அருளியதால், காட்சியளித்த ராமன் என்று திருப்பெயர் ஏற்பட, அதுவே வழக்கில் ஸ்ரீகாட்டுராமன் என்று மருவியதாம்.
★இந்தக் கதையோடு தொடர்புடைய வேறு இரண்டு திருக்கோயில்களும் உண்டு. ஆமாம். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே ஜடாயுவுக்கு முதலில் காட்சியளித்த ஸ்ரீலட்சுமி நாராயணர் கோயில் கொண்டிருக்கிறார். அதேபோல், ஸ்ரீராமன் வழிபட்ட தாக சொல்லப்படும் ஸ்ரீராமலிங்க ஸ்வாமி கோயிலும் உள்ளது. இந்தச் சிவாலயத்தில் ஸ்ரீராமன் `பிண்டராமன்’ எனும் ஒரு திருப்பெயருடன் அருள் பாலிப்பது விசேஷமாகும்.
★ஸ்ரீலட்சுமி நாராயணர் ஆலயத்துக்கு அருகில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. முன்னோர் ஆராதனைக்கு உகந்த நாள்களில் இங்கு வந்து ஸ்வாமியை வழிபட்டுவிட்டு, முன்னோர்களை வழிபடுவது மற்றும் ஆராதிப்பதும் சிறப்பு என்கிறார்கள். இதனால் பித்ருதோஷங்கள் நீங்கும். முன்னோர் ஆசியால் நம் சந்ததி சிறக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
★காட்டுராமர் ஆலயத்தில் ராமநவமி வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கல்யாணக் கோலம் காட்டிய தலம் இது என்பதால், தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’
★ஸ்ரீகாட்டுராமர் ஆலயத்தில், சந்நிதிக்கு எதிரில் அபூர்வக் கோலத்தில் தரிசனம் காட்டுகிறார் ஸ்ரீஆஞ்சநேயர். ஆமாம்... இவர் வயோதிகக் கோலத்தில் அருள்கிறாராம். இவருக்கு, நீராஞ்சன தீபம் ஏற்றி வழிபட்டால், கல்வி, உத்தியோக பாக்கியம், திருமணம், புத்திரப்பேறு, ஆரோக்கிய வாழ்வு, செல்வபோகம் ஆகிய ஆறு பாக்கியங்களை அருள்வார் என்கிறார்கள். அனுதினமும் ஸ்ரீராம பிரானைத் தரிசித்துக் கொண்டிருக்கும் ராமபக்த ஸ்ரீஆஞ்சநேயர், அதன் பலனாக, தாம் பெற்ற பாக்கியத்தை, பக்தர்களுக்கு வழங்குவதாக ஐதீகம்.
★ஶ்ரீ ராமநவமி புண்ணிய தினத்தில், திருநெல்வேலிச் சீமையில் திகழும் இந்த மூன்று கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வாருங்கள், உங்கள் வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்றத்தை காட்டி உங்களுக்கு அருள்வார் ஸ்ரீகாட்டுராமர்!
★திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் (நெல்லைச் சந்திப்பு) இருந்து, அருகன்குளத்துக்கு பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.
வணக்கத்துடன்
நூக சுபராஜராவ்
9944110869.
நாளை.......................
No comments:
Post a Comment