Tuesday, March 23, 2021

முருங்கைக் காய் / நெருஞ்சி முள்

 முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்.....                                     

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும்.

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன.

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

=========================================================================

நெருஞ்சி முள்


 ஒர் அற்புத மூலிகை


நெருஞ்சி முள் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது நம் பாதங்களை பதம் பார்த்து ரத்தம் வர வைக்கும் என்று தான் ஆனால் அது மருத்துவ தன்மை கொண்ட மூலிகை என்று நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. இது சாலையோரம் படர்ந்திருக்கும் கொடி வகை தாவரமாகும். 

நெருஞ்சி செடியின் இலை, கய, பூ, தண்டு, வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவ நன்மைகள் கொண்டது. ஊசி போன்ற கூர்மையான நெருஞ்சி முள்ளும் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டது.

நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது. 

சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது. 

சிறுநீரகம் சீராகும்!

சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்த்த 'கோக்சூராதி க்ருதம்’ ஆயுர்வேத மருந்து நல்ல பலன்தரும்.

* சிதைந்த நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம் ஆகியவற்றை தட்டிப் போட்டு  500 மில்லி நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, காலை மாலை இருவேளையும் 60 மில்லி அளவு குடித்து வந்தால் கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர்எரிச்சல் போன்றவை குணமாகும்.

* நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமஅளவு எடுத்துப் பொடி செய்து, அதிலிருந்து 2 கிராம் எடுத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். 

* பச்சை நெருஞ்சிலை 10 கிராம் அளவு எடுத்து நைத்து, 100 மில்லி தண்ணீரில் போட்டு, நாலில் ஒரு பங்காக வரும் அளவுக்கு, சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் பருகி வந்தால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குணமாகும்.

* இதன் இலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால்  சிறுநீரில் இரத்தம் கலந்து போகும் பிரச்னை குணமாகும்.

சூடு தணிப்பான்!

இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி எடுத்து, ஒரு பிடி அருகம்புல் சேர்த்து சுத்தம் பண்ணி, அதில், ஒரு லிட்டர் நீர்விட்டு, அரை லிட்டர் அளவுக்கு வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை, மாலை இருவேளையும் 50 மில்லி அளவு, மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல்சூடு தணியும். கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சொட்டுசொட்டாக சிறுநீர் போதல் ஆகியவை குணமாகும்.

கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கு மருந்து!

*  நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 

*  50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.

ஆண்மை அதிகரிக்கும்!

* நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதில் 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும். 

* நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். 

நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.

சிறுநீரகக் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அவசியமில்லாமல் பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும் நெருஞ்சிலை நெஞ்சில் இருத்துங்கள் வாழ்வு வளமாகும் மருத்துவச் செலவுகள் மட்டுப்படும்.

இந்த எளிமையான முறைகளை பயன்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் ...

நன்றி 🙏


No comments:

Post a Comment