சதாராவில் வாசம் செய்த போது ஸ்ரீ மஹா பெரியவா, ஒரு நாள் எங்கோ சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.
ஸ்ரீ மஹா பெரியவாளுக்கோ கூட வந்த நாலைந்து கைங்கர்ய அன்பர்களுக்கோ அந்த ஊரே பரிச்சியமில்லாதது.
அப்படியிருக்க சாலையில் சென்றுக் கொண்டிருந்த பெரியவா, ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டார்.
எதிரே இருந்த ஒரு பெரிய அந்த கால பங்களாவைக் காட்டி "அந்த கிரஹத்துக்கு போய் அங்கே ஒரு பெரிய படம் இருக்கும்.
நான் கேட்டேன்னு எடுத்துண்டு வாங்கோ" என்றார்.
கைங்கர்ய அன்பர்களுக்கு ஒன்றும் புரியாத புதிராய் இருந்தது.
அவர்கள் அந்த வீட்டு காவலாளியிடம் விபரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருந்து ஒரு மாது வந்தாள்.
அவள் விபரம் கேட்டு சந்தேகத்துடன் ஸ்ரீபெரியவா அருகில் வந்தவள் அந்த க்ஷண நேர தரிசனத்தால் உற்சாகமானாள்.
உடனே உள்ளே ஓடிப்போய், ஸ்ரீபெரியவாளெனும் சர்வக்ஞர் குறிப்பிட்ட அந்த படத்தை கைங்கர்ய அன்பர்கள் எடுக்க அனுமதித்து, கூட வந்து நின்றாள்.
தூசு படிந்த படத்தை சுத்தம் செய்ய சொல்ல, அதை பார்த்தவர்களுக்கு அது சத்ரபதி சிவாஜியின் திரு உருவம் என்று தெர்ந்தது.
அதற்கு ஒரு சந்தன மாலையை பெரியவா போடச் சொன்னார்.
ஒரு சால்வையையும் சாற்றச் சொன்னார்.
இந்த சால்வையை புறப்படும் போதே எடுத்துவர முன் ஏற்பாடாக பெரியாவா சொல்லியிருந்தாராம்.
" இவர் சிவ அவதாரம். உத்ரபாரதத்தில் சனாதன வைதீக சம்பர தாயங்களும் தர்மங்களும் காப்பாத்த அவதாரம் எடுத்தவர். இவராலே தான் இன்னும் தர்மங்கள் அழியாமலிருக்கு" என்றார் தெய்வமாம் பெரியவா.
பின் அவர்கள் சிவாஜி வம்சத்திலே வந்தவர்கள் என்பதும் அந்த மாது 13வது மகாராணி என்பதையும், ஒன்றும் அறியாதவர் போல் விசாரித்து அன்பர்கள் தெரிந்துக் கொள்ள திரு நாடகம் புரிந்தார்.
மகாராணிக்கு தெய்வமாம் பெரியவா, பழங்களையும் நல் ஆசியையும் வழங்கி அருளினார்.
அப்போது நடமாடும் தெய்வத்துடன் சென்று இந்த அனுபவத்தை ருசித்த சதாரா ஸ்ரீஜகதீஷ் பட் என்ற அன்பர் சொன்ன மகிமை இது..
🙏🙏🙏🙏
No comments:
Post a Comment