சுவாச பிரச்சனைகள் அனைத்தும் குணமாக:
தூதுவளை – 100 கிராம்
துளசி - 100 கிராம்
முசுமுசுக்கை - 100 கிராம்
கண்டங்கத்திரி - 100 கிராம்
ஆகிய நான்கையும் காயவைத்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
அதிமதுரம் – 10 கிராம்
ஜாதிக்காய் – 10 கிராம்
மாசிக்காய் – 10 கிராம்
ஜாதிப்பத்திரி – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
அக்ரகாரம் – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்
ஆகியவற்றை எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு பொடியை எடுத்து, தேனில் குழைந்து தினம் காலை, இரவு இருவேளை உணக்குப்பின் சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீரும்.
==========================================================================
இன்றைய (பாட்டி வைத்திய) தகவல் அறிவோம்.
1. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
2. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
3. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
4. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
5. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
No comments:
Post a Comment