Monday, March 15, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −18

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −18

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

பகுதி −18

251. சந்யாசிகள் முன்பும், குருவின் முன்பும் அவர்கள் அனுமதியில்லாமல் அமரக் கூடாது.

252. ஒருவர் சாப்பிட்ட இலையையோ, தட்டையோ தாண்டிச் செல்லக் கூடாது.

253. கிரகணத்தின் போது படுக்கை, தலையணை, துணிமணிகள் ஆகியவற்றைத் தீண்டக் கூடாது. தவறித் தீண்டினால், அவற்றை நீரில் நனைத்து, பின் உலர்த்தி உபயோகிக்க வேண்டும்.

254. கிரகண காலத்தில் சாப்பிடக் கூடாது.

255. தங்க மோதிரத்தை நடுவிரலில் அணியக் கூடாது.

256. கன்னத்தில் இருகைகளையும் வைத்துக்கொண்டு அமரக் கூடாது.

257. நடந்து செல்லும்போது, தரையில் கிடக்கின்ற எந்தத் துணியையும் தாண்டிச் செல்லக் கூடாது.

258. வீட்டிற்குள் நுழையும்போதும், வீட்டைவிட்டு வெளியேறும்போதும், நிலைப்படியில் காலை வைக்காமல், தாண்டியே செல்ல வேண்டும்.

259. தகுந்த காரணமில்லாமல், தனது வயது, சம்பளம், தனக்குள்ள சொத்து, தான் அடைந்த பெருமைகள், அவமானங்கள், தனது வீட்டிலுள்ள சண்டைச் சச்சரவுகள், தான் செய்கின்ற ஜபமந்திரம், தான் வழங்கிய நன்கொடை இவற்றைச் சொல்லிக்கொண்டு திரியக்கூடாது.

260. தனக்கு வலது புறத்தில் எச்சில் துப்பக் கூடாது.

261. நமது ஆப்த நண்பர்கள் அல்லது உறவுக்காரர்கள் வீட்டிற்குள் நுழையும்போது, வலதுகாலையே முதலில் உள்ளே வைத்துச் செல்ல வேண்டும்.

262. உணவருந்தியவுடன் குளிக்கக் கூடாது.

263. சுபகாரியங்களுக்குச் சென்று வந்த பிறகு, குளிக்கக் கூடாது.

264. தீபாவளியன்று எண்ணெய் ஸ்நானம் வெந்நீரிலேயே செய்யவேண்டும். அவ்விதம் செய்வது ஶ்ரீமஹாலக்ஷ்மியின் அனுக்ரஹத்தைக் கொடுக்கும்.

265. புண்ணிய நதிகளில் நீராடச்செல்லும்போது, முதலில் கால்களை வைக்கக் கூடாது.

சிறிது நீரைக் கைகளால் எடுத்து, தலையில் தெளித்துக்கொண்ட பிறகே நீராட இறங்க வேண்டும்..

(வளரும்..)

No comments:

Post a Comment