Saturday, March 20, 2021

தர்ம சாஸ்திரம் பகுதி −23

 (தெரிந்து கொள்ளலாமா?..)

தர்ம சாஸ்திரம் பகுதி −23

(ஆசிரியர் − திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)

326. பூஜை அறையில் விளக்கேற்றாமலும், வீட்டு வாசலில் கோலமிடாமலும் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது.

327. பரணி, க்ருத்திகை நக்ஷத்திரங்களில் தொலைதூரப் பயணத்தை மேற்கொள்ளக் கூடாது.

328. மனைவியை இழந்தவர் தமது பிள்ளைக்கு உபநயனம் செய்விக்கோ, திருமணச் சடங்குகளில் பங்குவகிக்கவோ கூடாது.

329. நவராத்திரி கன்யா பூஜைக்கு இரண்டு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளையும், பதினோரு வயதுக்கு மேற்பட்ட பெண்குழந்தைகளையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.

330. இரட்டையராய் பிறந்தவர்க்கு உபநயனமும், திருமணமும் வெவ்வேறு நாட்களில் செய்யக்கூடாது. இருவருக்கும் ஒரேநாளில்தான் செய்விக்க வேண்டும்.

331. கர்ப்பத்தில் இருக்கின்ற குழந்தைக்குச் சீமந்தச் சடங்குகளை நடத்தாமல் இருக்கக் கூடாது.

ஒருவேளை, சீமந்தச் சடங்குகள் நடத்தமுடியாதிருந்தால், குழந்தை பிறந்த பிறகு, சீமந்தச் சடங்கின் முக்கியமான அங்கங்களையாவது தவறாமல் செய்ய வேண்டும்.

332. திருமணத்திற்கு முன்பு செய்யப்படும் "வ்ரதம்" "ஜாதகதி" போன்ற சடங்குகளை மாலையிலோ, இரவிலோ செய்யக் கூடாது.

333. குழந்தைகளுக்கு வருடாவருடம் கொண்டாடுகின்ற பிறந்த நாள் வைபவத்தை, குழந்தை பிறந்த நட்சத்திரத்தன்றே கொண்டாட வேண்டும்.

ஆங்கிலத் தேதி அடிப்படையில் இவற்றைக் கொண்டாடுவது தவறான செயலாகும்.

334. குழந்தைக்கு ஆயுஷோமம் (முதல் வயது நிறைவு) செய்வதற்கு முன் நிச்சயமாக காதுகுத்து விழாவை முடித்திருக்க வேண்டும்.

335. பெண்ணைவிட வயதுகுறைந்த வரனுக்கு அவளைத் திருமணம் செய்து தரக்கூடாது.

336. தனது சகோதரிக்கும், வயிற்றில் பிறந்த பெண்ணிற்கும் புதிய சேலைகளை வாங்காமல், உபநயனம், திருமணம், சுமங்கலி ப்ரார்த்தனை ஆகியவற்றைச் செய்யக் கூடாது.

337. பதினாறு வயதிற்கு மேற்பட்ட ப்ரம்மசாரியை, உபநயனத்தில் "குமார போஜன"த்திற்கு அமர்த்தக் கூடாது.

அதே போன்று, ஸ்ரார்த்தத்தில் விஷ்ணு இலைக்கும் வரிக்கக் கூடாது.

338. திருமணத்தன்றே முதல் இரவுச் சடங்குகளைச் செய்யக் கூடாது.

339. எண்பது வருஷம் எட்டு மாதம் பூர்த்தியான பிறகே "ஸதாபிஷேக" வைபவத்தைக் கொண்டாட வேண்டும்.

340. உபநயனம், திருமணம் போன்றவை நடத்தப்படுகின்ற மேடைக்கு மிதியடிகளுடன் செல்லக் கூடாது. அவ்வாறு செல்வது அந்தச் சடங்குகளில் வரிக்கப்படுகின்ற தெய்வ சக்திகளை அவமதிக்கும் செயலாகும்.

(வளரும்..)

No comments:

Post a Comment