ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் -பகுதி 11
(By Venkatesan Varadharajan 6381369319)
ஶ்ரீகூர்மத்திலிருந்து பஸ் பூரி ஷேத்திரத்தை இரவு 12 மணிக்கு சென்றடைகிறது. கோயிலருகே ஒரு பழமையான சத்திரத்தில் தங்குவதற்கு ஏற்பாடாகி அனைவரும் லக்கேஜ் எடுத்துக்கொண்டு ஃபேனுக்கு அடியில் இடம் பிடிக்க போட்டியிட்டு ஒருவழியாக செட்டில் ஆகிறோம். வாசு மாமா காலையில் சமுத்ர ஸ்நானம் என்கிறார்.
காலை காபிக்குப்பிறகு அவரவர் ரிக்ஷா ஏறி சமுத்ரத்தை அடைகிறோம்.
புரி கடற்கரை (Puri Beach) அல்லது தங்கக் கடற்கரை என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள கடற்கரையாகும். இது வங்காள விரிகுடாவின் கரையில் உள்ளது. இது சுற்றுலாத் தலமாகவும் இந்துக்களின் புனித இடமாகவும் அறியப்படுகிறது. இந்தியச் சுற்றுலா அமைச்சகம், ஒடிசா நகரம், கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் மற்றும் கொல்கத்தாவின் கிழக்கு மண்டல கலாச்சார மையம் இணைந்து வருடம் தோறும் புரி கடற்கரை விழாவினை கொண்டாடுகிறது. சர்வதேச விருது பெற்ற உள்ளூர் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்ப காட்சிகளை இந்த கடற்கரையில் காணலாம்.
தம்பதியர்களாக நீராடி வழிபாடு செய்ய பிராமணர்கள் இருக்கிறார்கள்.
உயரமான கருவறை விமானம்
பூரி ஜெகந்நாதர் ஆலயம், கடற்கரைக் கோவில் என்பதால், கடலில் நீராடிய பிறகே இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும். கடற்கரையில் மார்க்கண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. கடலில் நீராடிவிட்டு, முதலில் மார்க்கண்டேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் போன்றவற்றில் நீராடிவிட்டு தான் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும்.
ஆலயத்திற்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோவிலுக்குச் செல்ல நான்கு வாசல்கள் இருக்கின்றன. சிங்கவாசல், குதிரை வாசல், யானை வாசல், புலிவாசல். இவற்றை அந்தப் பகுதி மக்கள் ‘சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாசலும் பிரமிடு போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக் கிறது. இந்த ஆலயத்தில் உள்ள ஒரு கோபுரம் 713 அடி உயரம் கொண்டதாகும். ஒடிசாவிலேயே இந்த கோபுரம்தான் மிகவும் உயரமானது. இது ராஜகோபுரம் இல்லை. மூலவர் ஜெகந்நாதரின் கருவறை விமானம் ஆகும்.
வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் காணப்படும் பூரி கடற்கரை, பூரி இரயில் நிலைத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகரின் பிரபல சுற்றுலாத் தலமான பூரி கடற்கரை, நீச்சலுக்கு உகந்ததான தலைசிறந்த இந்தியக் கடற்கரைகளுள் ஒன்றாக விளங்குகிறது.
இந்துக்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்படும் இக்கடற்கரையில் நடத்தப்படும் வருடாந்தர பூரி கடற்கரைத் திருவிழாவின் போது காட்சிப்படுத்தப்படும் மணல் ஓவியங்கள், ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கின்றன.
சர்வதேச விருது வென்ற உள்ளூர் மணல் ஓவியக் கலைஞரான சுதர்ஸன் பட்நாயக்கின் கலைப் படைப்புகள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை; அதனால் இத்திருவிழாவின் போது நீங்கள் பூரியில் இருக்க நேர்ந்தால் கட்டாயம் சென்று பார்த்து மகிழுங்கள்.
கடற்கரையோரத்தில் அடர் பொன்னிறத்தில் தகதகக்கும் நீளமான மணல்வெளி, உடலை வருடும் மெல்லிய தென்றல், சூரிய ஒளியில் மின்னும் தெளிவான தண்ணீர், சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அற்புதக்காட்சிகள் ஆகியவை இந்த கடற்கரையை நிரந்தர ஈர்ப்பாகத் திகழச்செய்கின்றன.
படம் சுதர்ஸன பட் உருவாக்கிய மணல் ஓவியங்கள்
No comments:
Post a Comment