Thursday, March 4, 2021

ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 12

 ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 12

(By Venkatesan Varadharajan 6381369319)

யாராலும் அவிழ்க்க முடியாத பூரி ஜெகந்நாதர் கோவில் மர்மங்கள் பற்றி தெரியுமா?..

அறிவியலுக்கும் புலப்படாத 10 வகை மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். 

1)யார் கட்டியது?

இந்த கோவில் சோழ மன்னன் அனந்தவர்மன் சோதங்கதேவன் என்னும் தமிழ் மன்னரால் கட்டப்பட்டது. பல வித்தியாசமான கட்டிடக் கலைகளை உள்ளடக்கிய பல்வேறு கோவில்களை தமிழ் மன்னர்கள் உலகமெங்கும் கட்டியிருக்கிறார்கள். இதை ஏன் ஒடிசாவில் சென்று தமிழன் கட்டியிருக்கிறான் என்பதும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

மற்ற இந்து கோவில்கள் போல அல்லாமல் இந்த கோவிலில் உள்ள மூலவர் சிலை புனித வேம்பு என்று அழைக்கப்படுகின்ற தாது பிரம்மத்தால் செய்யப்பட்டது. ஒவ்வொரு பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அதே மரத்தினால் மீண்டும் மூலவர் சிலை மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றது.

2)மூலவர் யார்?

இந்த கோவிலின் பிரதானமாக இருப்பது கிருஷ்ணர் தான். அதனால் இங்கு மூலவராக கிருஷ்ணரும் யசோதையும் பலராமனும் இருக்கிறார்கள். இந்த மூவரும் தான் இங்கு பிரதான வழிபாட்டுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்

​கருவறை விக்ரஹ மர்மங்கள்

உலகிலேயே வேறு எந்த கோவிலிலும் இல்லாத படி, இந்த பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையில் நிறைய மரத்தாலான சிலைகள் இருக்கின்றன. உலகிலேயே இதுபோன்ற அமைப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல இந்த மூலவர் சிலைகள் முழுமையடையாத நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான காரணமும் தெரியாமலேயே மர்மமாகவே இருக்கிறது.

3). நவகலே பரா

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோவிலில் நவகலே பரா என்ற பெயரில் மிக பிரமாண்டமாக திருவிழா நடத்தப்படும். அதில் ஒவ்வொரு திருவிழாவின் போது, இந்த மூலவர் சிலைகள் புதிதாக செய்யப்படுகின்றன. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று போல மாற்றிவிட்டார்கள்.

4) கோபுர நிழல்

தஞ்சை பெரிய கோவிலை நாம் மெச்சுகின்ற ஒரு விஷயம் அதன் கோபுர நிழல் கீழே விழாமல் இருப்பது தான். அதை சோழர் கால கட்டடக் கலைக்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லுவோம். அதேபோல தான் இந்த பூரி ஜெகந்நாதர் கோவிலின் கோபுர நிழலும் எப்படி சூரியன் சுட்டெரித்தாலும் தரையில் விழுவதில்லை.

5) பறவைகள்

பொதுவாக கோவில் கோபுரங்களைச் சுற்றி புறாக்கள், கழுகு போன்ற பறவைகள் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த கோவில் கோபுரங்களைச் சுற்றி எந்த பறவைகளும் பறப்பதில்லையாம். அதேபோல் இந்த கோபுரத்தின் மீது எந்த பறவைகளும் அமருவதே கிடையாதாம். அது ஏன் என்ற கேள்விக்கு இன்றும் யாருக்கும் விடை தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.

(மர்மங்கள் தொடரும்)



No comments:

Post a Comment