#சந்தியாவந்தனம்:
☀🕉🔆🕉🌞🕉
நம்முடைய ஆசாரம் மிகவும் கடினமாக இருப்பதாக நினைப்பதுவே சந்த்யாவந்தனத்தை 'ஸ்கிப்' செய்வதற்கான காரணம்.
அனுஷ்டானத்தின் மூலம் சந்தியாவந்தனம். இது ப்ராமணனின் கடமை என்பதை யாரும் உணரவில்லை. ப்ராமணன் கையால் அர்க்யத்தை ஏற்க தேவாதி தேவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணரவில்லை. எனக்கு காலை ஆறு மணிக்கு முன்னர் அர்க்யம் விட்டால்தான் சாப்பாடு என்று பகவான் சொன்னால் நிலைமை மாறுமா?.
சந்த்யாவந்தனத்தைப் பற்றி பல கதைகள் உண்டு. அக்பர் - பீர்பால் கமை அதிலொன்று. மாறுவேடத்தில் செல்லும் இருவர் ஒரு ப்ராமணன் பிச்சை எடுப்பதைப் பார்த்தனர். அக்பர், பீர்பாலிடம் "பார்த்தாயா, உன் குல அந்தணன் சோம்பித் திரிந்து பிச்சை எடுப்பதை, உன் குலம் இவ்வளவுதான், நாங்கள் ராஜ வம்சம், நீங்கள் பிச்சை அம்சம்" என எள்ளி நகையாடினான். அந்த ப்ராமணனை தனியாக சந்தித்த பீர்பால்,"ஐயா, உங்களுக்கு பிச்சையின் மூலம் எவ்வளவு ்பைசா கிடைக்கும்?" என்று கேட்டார். "எனக்கு ஒரு வெள்ளி அளவிற்கு கிடைக்கும்" என்றார் பிராமணர். "சரி, நாளை முதல் என் வீட்டுக்கு வாருங்கள், அந்த் ஒரு வெள்ளியை நான் தருகிறேன். ஆனால் அதற்கு இரண்டு நிபந்தனைகள். ஒன்று எக்காரணம் கொண்டும் பிச்சை எடுக்க கூடாது. இரண்டு தவறாமல் 1000 காயத்ரி ஜபிக்க வேண்டும். " பீர்பால் சொன்னார். இவரும் சம்மதித்து அடுத்த நாளிலிருந்து 1000 காயத்ரி ஜபித்து விட்டு, சாயந்திரம் 1 வெள்ளி பெற்று செல்வார். இப்படியே மூன்று மாதங்கள் ஆயிற்று. இப்போதெல்லாம் பிராமணர் வருவதில்லை. பீர்பாலும் மறந்தே போனார். மீண்டும் மாறுவேடத்தில் நகர்வலம் வருகையில் ஓரிடத்தில் நிறைய கூட்டம். எல்லோரும் வரிசையில. நின்று அந்த்மகானை தரிசித்த்வண்ணம் இருந்தனர். அங்கே ஒரே பேச்சு. சுவாமியிடம் ஆசி வாங்கினால் எல்லாம் நடக்கிறது. ஆசி பெற்றவர் பாக்யசாலி. பெறாதவர் துரதிர்ஷடக்கார்ர். அக்பரே அவரிடம் ஆசி பெற்றால்தான் நாட்டை சிறப்பாக ஆள முடியும். என்றவுடன் அக்பர், " வா உள்ளே போய் யாரென்று பார்ப்போம் "என்று உள்ளே போய் வணங்கி நின்றார். தனக்கு அமைதி கிடைப்பதை உணர்ந்த அக்பர் வெளியான வர மனமில்லாமல் வருகிறார். பீர்பாலிடம் " அவருடய முகத்தில் அந்த ஒளியை கவனித்தீரா? எந்த துன்பத்தையும் நீக்குபவர் இவர், வணங்கப்பட வேண்டியவர்" என்றார். பீர்பால் அவரிடம்" மஹாராஜா அவர் யார் என நினைக்கிறீர்கள்?" என்றார். இவர் யாரென கேட்க, "அந்த பிராமண்பிச்சைக்காரன்தான் இவர்!" என்று காயத்ரி மஹிமையை சொன்னார். மூன்று மாதத்தில் அரசனை மண்டியிட வைத்தது காயத்ரி ஜபம்.
அந்த காயத்ரியை் சம்புடத்தில் வைத்து கவனமாக திறந்து ஜபித்து பின் மூடி வைப்பதே சந்தியாவந்தனம். ஐம்பது வருடம் முன்னர் நம் முன்னோர்கள் ஜபித்ததன் பலன் தாம் நன்றாக இருக்கிறோம். நாமும் நம் சந்த்தியும் நன்றாக இருக்க ஜபியுங்கள்.
இந்த மந்த்ரம் உண்மையிலேயே ஸக்தி வாய்ந்த்தா என எளிய முறையில் டெஸ்ட் பண்ணிக்கூட பிறகு அனுதினமும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
ஒரே ஒரு நாள் இரண்டு மணி நேரம் காலையில் சூரியோதயம் முன்னரே ஆரம்பித்து 1008 எண்ணிக்கை முடித்து விடுங்கள். அலுவலகம், கல்லூரி, பள்ளி்அல்லது எங்கே நீங்கள் சென்றாலும் மாறுபட்ட கவனிப்பை பெறுவீர்கள்.
🚩நீங்கள் கோயிலுக்கு போனால் உங்கள் நெற்றிநடுவில் ஒரு குறுகுறுப்பை உணரலாம். அதுவும் மூலவரிடமிருந்து வருவதை உணரலாம். மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்யாசம் காயத்ரி ஸ்மரணை மட்டுமே. .
இன்றே சங்கல்பம் செய்வோம்
No comments:
Post a Comment