வட இந்திய பயணத்திட்டம் வழி தங்குமிடம் உணவு பார்க்கும் இடங்கள். ...பகுதி 5
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 6381369319
டேராடூன் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். இதுவே அம்மாநிலத்தின் பெரிய நகரமும் ஆகும். இது இமயமலைக்கும் சிவாலிக் மலைக்கும் இடையே டூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. புது தில்லியிலிருந்து 230 கிமீ தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.ஹரித்வாருக்கு மிக அருகில்.
பார்க்க நிறைய இயற்கை காட்சிகள் அருகில் ஸஹஸ்ரதாரா நீர் வீழ்ச்சி. குறைந்த பட்ஜட் எனில் ஹரிதவாரில் தங்கி டேராடூன் ,முசௌரி போய் வரலாம்.
முசௌரி
தனிமையும் இயற்கையும் இரண்டறக் கலந்துள்ள பூமி என்றால், அது உத்தரகாண்டில் இருக்கும் முசோரிதான். டேராடூனிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் முசோரி, பசுமை போர்த்திய மலைவாழிடம். இங்கு உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் `இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’, `பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ போன்ற பொன்மொழிகளுடன் வரவேற்கிறது. இந்தக் கிராமம் எந்த வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும் அழகாகவும் இருப்பதைப் பார்ப்பதற்காகவே முசோரிக்குச் சென்று வர வேண்டும்.
1825-ல் கேப்டன் யங் கட்டிய `முல்லிங்கர்’ வீடு, அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் ஏராளமாக முசோரியில் இருக்கின்றன. முசோரியின் உயரமான இடமான `லால்டிப்பா’ லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்தொடரின் அழகை இங்கே இருந்து ரசிக்கலாம். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவை இங்கிருந்து பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில் அதிகமாக லால்டிப்பாவுக்கு வந்துபோகிறார்கள்.
கெம்ப்டி மற்றும் ஜரிபானி நீர்வீழ்ச்சிகள் முசோரியின் சிறப்பு. 40 அடி உயரத்தில் இருந்து கொட்டும் கெம்ப்டி அருவியை அண்ணாந்து பார்க்கும்போது, ஆச்சர்யத்தில் கண்கள் விரியும். மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில் முசோரி முக்கியமானது. இங்கு பயணிக்க, செப்டம்பர் முதல் ஜூன் வரையிலான நாள்களே ஏற்றவை.
ஆன்லைன் பேக்கேஜ்: மூன்று பகல் இரண்டு இரவு முசோரியில் தங்கி சுற்றிப்பார்ப்பதற்கு ரூ.7,500-லிருந்து பேக்கேஜ்கள் கிடைக்கின்றன. இந்த பேக்கேஜில் சைட் சீயிங், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்றவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.
எப்படிச் செல்வது?: விமானம் வழியாகப் பயணிக்க நினைப்பவர்கள் முசோரிக்கு 30 கி.மீ தொலைவில் இருக்கும் டேராடூன் ஜாலி கிரேன்ட் விமானநிலையம் வரை பயணிக்கலாம். அங்கிருந்து கார் மூலமாக முசோரியை அடைய முடியும். முசோரிக்கு டேராடூன் மற்றும் புதுடெல்லியிலிருந்து தொடர் பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
சிம்லா.
சென்னையிலிருந்து 2550 கிமீ. டெல்லி சென்று பஸ் காரில் செல்ல்லாம்..
'கோடை காலப் புகலிடம்' மற்றும் 'மலைகளின் ராணி' என்று அறியப்படும் சிம்லா இமாச்சலப்பிரதேசத்தின் தலை நகரமாகும். இந்த நகரம் கடல் மட்டத்திலிருந்து 2202 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சிம்லா மாவட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. காளி தேவியின் மற்றொரு பெயரான 'சியாமளா' என்ற பெயரில் இருந்து சிம்லா என்ற பெயர் உருவானது. இந்த பெயரை தற்போது மாற்றி மீண்டும் பழைய பெயரையே வைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
ரிட்ஜில் ஜில் ஜில் காட்சி
காட்சிபூர்வமான இந்த மலைத்தொடர் பல சுற்றுலாத்தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. லக்கார் பஜார் மற்றும் ஸ்காண்டல் பாயிண்டை இணைக்கும் மலைத்தொடர்களின் திறந்தவெளி சிகரமான ரிட்ஜிலிரிந்து காணக்கிடைக்கும் காட்சியானது பார்வையாளர்களை கவரும்
போக்குவரத்து
சிம்லா, ஆகாய,சாலை மற்றும் ரயில் போன்ற முக்கிய போக்குவரத்து வழிகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சிம்லாவின் மிக நெருக்கமான விமான தளமாக ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் விளங்குகிறது.
சிம்லாவில் காணவேண்டிய முக்கியமான இடங்கள்
குர்க்கா கேட், கிறிஸ்ட் சர்ச், அன்னன்டேல், அரசு அருங்காட்சியகம், பசுமைப் பள்ளத்தாக்கு, மலையேற்றப்பாதை, உட்வில்லி பேலஸ், க்லென், ஸ்காண்டல் பாய்ண்ட், மவுண்டன் பைக்கிங், காம்னா தேவி கோவில் உள்ளிட்ட எக்கச்சக்கமான இடங்கள் இங்கு இருக்கின்றன.
சிம்லாவில் இரண்டு முக்கிய இடங்களான குலு, மணாலிக்கு இடையே வெறும் 40 கிமீ தூரம் தான். இந்த இரண்டு பகுதிகளுக்கும் பொதுவாக நிறைய இடங்கள் உள்ளன.
‘தேவர்கள் வசிக்கும் பூமி’ எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி, மாநிலத்தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏழு முக்கிய ரிஷிகள் வசித்த புனித பூமியாக கருதப்படும் இந்த நகரம் இந்து புராணத்தில் கூட இடம்பெற்றுள்ளதாம். இமாச்சல பிரதேசத்தின் முக்கிய மலைப்பகுதி சுற்றுலாத்தலமாக மணாலி விளங்குகிறது. இங்கு செல்லும் பயணிகள் ஹதிம்பா கோயில், சோலங் பள்ளத்தாக்கு, ரோஹ்டாக் பாஸ், ரஹலா ஃபால்ஸ் மற்றும் பியாஸ் குயின்ட் ஏரி, கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்’ போன்றவை வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். மேலும், மா ஷாவரி கோயில், கிளப் ஹவுஸ், ரகுநாத் கோயில் மற்றும் ஜகந்நாதி தேவி கோயில் என மேலும் பல இடங்கள் உள்ளன.
தொடர் வது நைமிசாரண்யம் அயோத்தி
No comments:
Post a Comment