Thursday, July 2, 2020

மானசரோவர் பயணம் பகுதி 09

துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம்  ஒன்பதாவது (9) அத்தியாயம்.  ஆரம்பமாகின்றது. 😊

By சுபஸ்ரீஸ்ரீராம்
(Subhasri Sriram)


மானசரோவர் பயணம் பகுதி (9)..

இன்று ஜூலை 3ம் தேதி. இரவு கதவை சாத்திவிட்டு, தூங்கி விட்டோம்.. மணி 9.40.. திடீர் என்று கதவு தட்டும் சத்தம். திறந்துப் பார்த்தால், சுபம் நின்று இருந்தார்..

அவர் ஒரு குட் நியூஸ் சொன்னார்..

நாளைக்காலை 5 மணிக்கெல்லாம் ரெடியாக இருங்கள்.. ஹில்சா போகிறோம்னு சொன்னார்.. நான் நிஜமாத் தான் சொல்றீங்களான்னு கேட்டேன். இதில் ஒரு துளிக்கூட மாற்றமில்லை என்றார்.. மேக்சிமம் ஒன்னு அல்லது ரெண்டு நாளுக்குள்ள கைலாஷ் போய்விடுவோம்னு சொன்னார்..

உடனே சந்தோஷத்தில எனக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.. தலைக்கால் புரியவில்லை.. தூக்கம் எங்கள் யாருக்கும் வரவில்லை...

இருந்தாலும் துணிகளை எல்லாம் பேக் பண்ணி ரெடியாக இருந்தோம்...

இன்று ஜூலை 4ம் தேதி.. 😊

வழக்கம் போல காலை எழுந்து பல் தேய்த்தோம்.. டீ குடித்துவிட்டு ஹில்சா செல்வதற்கு ரெடியாக இருந்தோம்..  சரியாக காலை 6.30 மணிக்கு ஏர்ப்போர்ட் நடந்தே வந்தோம்... ஒரே சந்தோஷம்..

அதற்கு முன் இங்கு நடந்த சிலவிஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன். 

சிமிக்கோட்ல, குளிக்கலாம்னு போனா, தண்ணி எப்போதும், ஒரே செம்ம ஜில்லிப்பு தான் இருக்கும்... சரி வெந்நீர் வருதான்னு பார்த்தா, விடிய காலை 4 மணிக்கு முன்னர் குளிச்சா வெந்நீர் ஓரளவு வெதுவெதுப்பா வரும்னு பக்கத்து ரூம்காரங்க சொன்னாங்க.

எப்படியோ தினமும் குளிச்சுடுவோம்.. 😜 

அடுத்து, நான் ஒரு அம்மாவைப் பார்த்தேன். அவங்க சிமிக்கோட் ஏர்ப்போர்ட்லேர்ந்து, எல்லாருடைய லக்கேஜ்ஜையும் முதுகுல கயிறுக்கட்டிக்கிட்டு தூக்கிட்டு வருவாங்க... கிட்டத்தட்ட கீழ இருந்து மேல தூக்கிட்டு வர்ற 20 நிமிஷம் ஆகும். இவங்க எங்க ரெஸ்ட்டாரண்ட் வாசல்ல சேர்ல தினமும் உட்கார்ந்து இருப்பாங்க.. கூலிக்கு வேலைப் பார்க்கறாங்க.. இவங்க வாய்ப் பேசமுடியாது..  அவங்களுக்கு நான் வைத்த பெயர் “Bag Amma".. 

கையில மொபைல் இருந்தது..அவங்களைக் கூப்பிட்டு போட்டோ எடுத்துக்கொண்டேன். அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்..

ரெஸ்டாரண்ட்ல நாங்க சோர்வா உட்கார்ந்து இருக்கும் போது ஒரு பையன் வந்து குடிக்க டீ தண்ணி வேணுமான்னு கேட்பாரு.. அவர் சில சமயம் டேன்ஸ்  சூப்பரா ஆடுவாரு. அவர் எங்க ரூம் அருகில் உள்ள சிவனுக்கு தினமும் கிண்ணத்தில் தண்ணீர் வைப்பார்..காலங்கார்த்தால குளிச்சுட்டு, வந்து ஸ்லோகம் சொல்லுவார்..நன்கு காதில் விழும்.  அவர் பேசுவது சரியாக புரியாது... அவர் ஒரு லாமா என்று அருகில்  இருந்தவர் சொன்னார்.. அவருக்கு நான் வைத்த பெயர் “சிமிக்கோட் சல்மான்”.😃

ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்த்து, எப்படா கிளம்புவோம்னு இருந்தது. பிறகு எனக்கு, பேசாமா  கேன்சல் பண்ணிட்டு துபாய்க்கு போயிடலாம்னு தோணியது.. பெருமாள் தான் சோதிப்பார்ன்னு கேள்விப்பட்டுருக்கேன். ஆனா அதைவிட டபுள் பங்கு சிவனும் சோதிக்கறார்னு ஸ்ரீராமிடம் சொன்னேன்.. :P

ஒரு நாள் லேடீஸ் எல்லாம் சேர்ந்து இரவு நேபாள் செஃப்க்கிட்ட கெஞ்சி மிளகு ரசமும், முள்ளங்கி சாம்பாரும் செய்தார்கள்.. கைலாஷ் தரிசனம் முடிந்தவர்கள் வேறு இங்கு வந்தார்கள்.. ஒரே கூட்டம்.. அனைவருக்கும் பிடித்திருந்தது... .

 இப்படி சுவையான அனுபவங்கள் பல கிடைத்தது..

சரி விஷயத்திற்கு வருகின்றேன்..

சிமிக்கோட்டில் இருந்து ஹில்சா, ஹெலிக்காப்டரில் 25 நிமிஷப் பயணம்.. பறக்க ஆரம்பித்துவிட்டோம். 😍

உங்களை மாதிரி தான்  நானும் கைலாஷ் தரிசனம் செய்ய நாளைய பொழுது,  எப்பொழுது விடியும்னு காத்துக்கொண்டு இருக்கேன்.. 

மீண்டும் மானசரோவர் பகுதி தொடரும்... நாளை சந்திப்போம்





No comments:

Post a Comment