🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹10🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்).(By சுஜாதா&வெங்கடேசன்)பகுதி 10(6381369319)
பொக்கிஷ அறை…
பொக்கிஷம் – விலை மதிப்புள்ள தங்க சிம்மாசனம், கிரீடங்கள், நாணயங்கள், சிலைகள், ஆபரணங்கள் மற்றும் வைரங்கள் மற்றும் இதர நவரத்தின கற்கள் போன்றவை சேகரித்துவைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு, நீங்கள் தங்கம் நிறைந்த ஒரு அரங்கத்தில் நடப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.
இந்த பொக்கிஷங்கள் ஏ முதல் எஃப் வரை பெயரிடப்பட்ட 6 இரகசிய பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பி என்ற பாதாள அறை, அதைத் திறப்பவருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடும் என்ற பயம் காரணமாக திறக்கப்படவில்லை. இந்த பாதாள அறை குறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு முன்பு நாம் ஏ, சி, டி, ஈ மற்றும் எஃப் ஆகிய பாதாள அறைகளில் உள்ள கற்பனைக்கும் எட்டாத அளவில் குவிக்கப்பட்டிருக்க சாத்தியமுள்ள பொக்கிஷங்களைப் புரிந்துகொள்வோம்.
கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம் – தூய தங்கத்திலான 3.5 அடி உயரமுள்ள மஹாவிஷ்ணு திருவுருவச்சிலை, 18 அடி நீளமுள்ள ஒரு தங்க செயின், 500 கிலோ எடையுள்ள தங்க சிப்பம், பல்வேறு ரத்தினங்கள் பதித்த தடிமனான 1200 தங்க நாணயங்கள், மாணிக்கம் மற்றும் நீலமணிக்கற்கள் பதித்த தங்க தேங்காய் கொட்டாங்கச்சிகள்.
இவை மட்டும் தான் என்றில்லை! மூட்டை மூட்டையாக விலைமதிப்பு மிக்க நவரத்தினக்கற்கள், நெக்லெஸ்கள் மற்றும் புராதன கைவினைப்பொருட்களும் கணக்கில் அடங்கும். உண்மையில், நெப்போலியன் காலத்து மற்றும் ரோமானியப் பேரரசு காலத்து தங்க நாணயங்களும் இதில் அடங்கும். இந்த நாணயங்கள், வெவ்வேறு பல்லாயிரமாண்டுகளைச் சேர்ந்தவை என்பதால் விலைமதிப்பற்றவை ஆகும். இவற்றில் சில கி.மு. காலத்தைச் சேர்ந்தவை” என பல்வேறு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்றம் இவற்றைத் திறக்க உத்தரவிடவில்லை என்றால், பெரும்பாலானோருக்கு இந்த பொக்கிஷக் குவியல் பற்றி தெரியவந்திருக்காது. இந்த பாதாள அறைகள் திறக்கப்பட்டதும், ஜி மற்றும் எஃப் என மேலும் இரண்டு பாதாள அறைகள் உள்ளது தெரியவந்தது. ஆனால், மிகப்பெரிய தீய சகுனம் உள்ளதாக மக்களால் பார்க்கப்படுவதால் பி இன்னும் மூடிய நிலையிலேயே உள்ளது. இந்த அறையின் நுழைவாயிலை ஒரு பாம்பு காவல் காப்பதாக, கோயில் தீட்சிதர்கள் இதை ஓர் எச்சரிக்கையாகக் கருதுகிறார்கள்.
நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பாதாள அறை பி –க்கு வெளியிலிருந்த உலோக கிரில் கதவினை திறந்தனர். அதற்கு உள்புறத்தில் ஒரு கனத்த மரக்கதவு இருந்தது. அதனையும் திறந்த போது, உள்ளே இரும்பால் செய்யப்பட்டிருந்த மூன்றாவது கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் குழு உறுப்பினர்கள் பூட்டு-சாவி செய்பவரின் சேவையை பெற வேண்டியிருந்தது. ஆனால், திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தினர், பாதாள அறை பி –யை திறப்பதற்கெதிராக, தீட்சிதர்களின் எச்சரிக்கையை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் ஒரு தடையாணை பெற்றுவிட்டனர்.
நியுயார்க்கரில் வெளியான ஒரு கட்டுரையில் ஜேக் ஹால்பெர்ன் இப்படி குறிப்பிடுகிறார் திருவனந்தபுரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தக் கோயிலின் பாதாள அறைகளைத் திறந்து சோதிப்பது பற்றி ஆர்ப்பரிக்கவில்லை. ஆரம்பத்தில் இது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா போன்ற சூழ்ச்சிகளில் வெறியான, ”மூடியவைகளை” அதிக முக்கியத்துவம் உள்ளவையாக கருதும் ஒரு தேசத்தால், மர்மம் நிறைந்த பூட்டப்பட்டுள்ள ஒரு கதவு அப்படியே வைத்திருக்கப்பட வேண்டும் என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. ஆனால், இந்தியாவில் இந்து கோயில்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் செல்வமானது, ஆன்மிகமாக பரந்த அளவில் பார்க்கப்படுகிறதே அன்றி, நிதிசார்ந்த வரையறையாக பார்க்கப்படுவதில்லை.”
இந்த தடவை அந்த அறையை மூடப்பட்டதாகவே நாம் வைத்திருப்போம், குறைந்தபட்சம், இன்னும் சில காலத்திற்கு….,நல்ல வேளையாக கோர்ட் வழக்கும் அரச குடும்பத்திற்கு சாதகமாக வந்து இருக்கு.
திருவனந்தபுரம்…..
ஏழு கடற்கரை மலைகளை ஒட்டி உருவாகியிருக்கும் இந்த நகரம் பரபரப்பான பெருநகரமாக மாறிவிட்டபோதிலும் தன் பழமைப்பொலிவை இன்னும் இழக்காமல் காட்சியளிக்கிறது.
இந்த நகரத்துக்காக பரசுராமர் கடல் தெய்வமான வருணனுடன் போரிட்டதாக உள்ளூர் ஐதீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. மஹாவிஷ்ணுவால் பாதாள லோகத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன் மஹாபலி மன்னன் இந்த பூமியை ஆண்டதாக புராணிக கதைகள் கூறுகின்றன.
இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றாக மாறியுள்ள திருவனந்தபுரத்தில் பல அரசு சார்ந்த நிறுவனங்களும், கல்வி மையங்களும், தனியார் வணிக நிறுவன கேந்திரங்களும் அமைந்திருக்கின்றன.
இந்திய விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப மையம்(IIST), விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம்(VSSC), இந்திய தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், சமூக வளர்ச்சி ஆய்வியல் மையம், சர்வதேச ‘பொது உரிமைக் குறியீடு கணிணி மென்பொருள்’ ஆராய்ச்சிக்கழகம்(ICFOSS), இந்திய அறிவியல் அராய்ச்சி மற்றும் கல்வி மையம் (IISER), மண்டல ஆராய்ச்சி ஆய்வுக்கூடம், சித்திரைத்திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கழகம், ராஜிவ் காந்தி உயிரியல் தொழில்நுட்ப மையம், பூகோள அறிவியல் கல்வி மையம் மற்றும் தொழில்நுட்ப பூங்கா போன்ற முக்கிய ஸ்தாபனங்களும் இதில் அடங்கும்.
திருவனந்தபுரத்தின் ஆன்மீக அடையாளமான ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள நவராத்திரி மண்டபத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கடவுளாகிய சரஸ்வதி தேவியை கொண்டாடும் விதத்தில் ஒரு இசைத்திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.
இங்குள்ள குதிர மாளிகை அல்லது புத்தேன் மாளிகை என்று அழைக்கப்படும் பாரம்பரிய அரண்மனை கேரளிய கட்டிடக்கலை பாணிக்கான உதாரணமாக அமைந்துள்ளது. மேலும் திருவனந்தபுரத்தின் மஹாத்மா காந்தி சாலையில் பாரம்பரிய கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் பல மாளிகைகளை இன்றும் பார்க்கலாம்.
பழமை மற்றும் நவீனம் ஆகிய இரண்டு அம்சங்களும் இந்த தெருவில் ஒன்றோடன்று கலந்து மிளிர்கின்றன. சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் காணப்படும் மாளிகைகளில் பழமையையும் கண்ணாடி மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் வானோங்கி நிற்கும் பலமாடிக்கட்டிடங்களில் நவீனத்தையும் கண்டு கொள்ளலாம்.
பாளையம் மசூதி, பழைய விநாயகர் கோயில், ஐரோப்பியபாணி கோபுரங்களுடன் எழுப்பப்பட்டிருக்கும் கிறிஸ்டியன் கதீட்ரல் போன்றவை அருகருகே அமைந்திருக்கும் அதிசயத்தையும் இங்கு பார்க்கலாம்.
இங்குள்ள கனககுண்ணு அரண்மனை அந்நாளைய திருவாங்கூர் மன்னர்களின் பொற்காலத்தை நினைவூட்டும் வகையில் வீற்றுள்ளது. இதன் தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்கள் உங்களை வெகுவாக கவரக்கூடும்.
நேப்பியர் மியூசியம் மற்றும் ஸ்ரீ சித்திரா ஆர்ட் காலரி போன்ற இடங்களில் வரலாற்று மற்றும் கலை அம்சங்களின் காட்சிகளையும் நீங்கள் ரசிக்கலாம். ராஜ வம்சத்தினரின் ரசனை உணர்வு உங்களை வியப்படைய வைக்கும் என்பதில் ஐயமில்லை.
கரமனா ஆறு மற்றும் அக்குளம் ஏரி போன்ற இடங்களின் இயற்கை எழில் பின்னணியும் நீங்கள் தவறவிடக்கூடாத அம்சமாகும். வனவிலங்குப்பூங்கா, நெய்யார் அணை மற்றும் காட்டுயிர் சரணாலயங்களும் போன்ற இடங்களும் திருவனந்தபுரம் வரும்போது தவறாமல் விஜயம் செய்யவேண்டிய இடங்களாகும்.
இந்த இடங்களில் கிடைக்கும் இயற்கையின் அருகாமையானது சொந்த கவலைகளை எல்லாம் மறக்க வைக்கும் சக்தி கொண்டதாகும். ஹேப்பி லேண்ட் வாட்டர் பார்க் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு பொழுதுபோக்கு ஸ்தலமாகும். ஷாப்பிங் பிரியர்களுக்கென்றே திருவனந்தபுரத்தில் சாலை பஜார் கடைத்தெரு காத்திருக்கிறது.
கிள்ளி ஆறு மற்றும் கரமணா ஆறு ஆகிய இரண்டு ஆறுகளின் கரையில் திருவனந்தபுரம் நகரம் அமைந்துள்ளது. கிழக்கு எல்லையில் தமிழ்நாடும் மேற்கு எல்லையில் அரபிக்கடலும் இதன் எல்லைகளாக காணப்படுகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளதால் திருவனந்தபுரம் பகுதி முழுவதுமே பசுமையான இயற்கை எழிற்காட்சிகள் நிரம்பிக் காணப்படுகின்றன. ஆகவே சுற்றிப்பார்க்க அலுக்கவே அலுக்காத சூழலும் ரம்மியமும் இங்கு மிகுந்துள்ளன.
தென்னை மரங்களின் அணிவகுப்போடு கூடிய தங்கமணற்பரப்புடன் மின்னும் தூய்மையான கடற்கரைகள், சொக்க வைக்கும் உப்பங்கழி ஓடைகள், கொஞ்சமும் பொலிவு குறையாத பாரம்பரியம் மிளிரும் வரலாற்று சின்னங்கள் மற்றும் கோயில்கள் போன்ற அம்சங்கள் வெகு தூரத்திலிருந்தும் சுற்றுலா ரசிகர்களை திருவனந்தபுரத்திற்கு கவர்ந்து இழுக்கின்றன.
இம்மாவட்டத்திலுள்ள அகஸ்தியர் கூடம் எனும் மலைச்சிகரம்ம் கடல் மட்டத்திலிருந்து 1868 மீட்டர் உயரத்தில் வானுயர்ந்து காட்சியளிக்கிறது. பொன்முடி மற்றும் முக்குணிமலா ஆகியவையும் இந்த தென்கோடி நகரத்துக்கு அருகிலுள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்களாகும். பறவைக்கோயில் எனும் இடத்தில் சூரிய உதயத்தின் அற்புதமான அழகை கண்டு ரசிக்கவும் பயணிகள் மறக்கக்கூடாது.
மழைக்காலத்தின்போது இந்த நகரம் ஓணம் திருவிழாக் கொண்டாட்டங்களை வரவேற்க தயாராகிவிடுகிறது. வசந்த கால அறுவடைத்திருவிழா, பாம்பு படகுப்போட்டி மற்றும் யானை ஊர்வலம் போன்ற பாரம்பரிய நறுமணம் கமழும் கொண்டாட்டங்களில் நகரமக்கள் உற்சாகமாக பங்கேற்பதை காணலாம்.
இந்த விழாக்காலத்தின் போது திருவனந்தபுரம் நகரம் முழுதுமே ஒரு சொர்க்க பூமி போன்று ஜொலிப்பதை நேரில் பார்த்தால் சுலபமாக புரிந்து கொள்ள முடியும். மோகினியாட்டம், கதகளி, கூடியாட்டம் மற்றும் இன்னும் பல எண்ணற்ற, வண்ணமயமான நிகழ்த்து கலை(பாரம்பரிய கூத்து/நடனக்கலை) வடிவங்கள் கனவுக்காட்சிகள் போன்று இக்காலத்தில் அரங்கேற்றப்படுகின்றன.
கேரள மாநிலத்தின் எல்லாப்பகுதிகளையும் போலவே திருவனந்தபுரமும் வருடம் முழுக்க இனிமையான பருவநிலையுடன் காணப்படுகிறது. குறிப்பிடத்தக்க சுற்றுலாப்பருவம் என்று இங்கு ஏதுமில்லை.
விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக நல்ல போக்குவரத்து வசதிகளையும் இந்த பாரம்பரிய தலைநகரம் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலுள்ள சுற்றுலா ரசிகர்கள் அனைவரும் ஆசுவாசமாக விஜயம் செய்யவேண்டிய ஒரு அமைதியான தூய நகரம் இந்த திருவனந்தபுரம் ஆகும்….
படங்கள்1) பொக்கிஷ அறை கதவு (பாம்பு காவல் காப்பது)2,3,4 பொக்கிஷங்கள்




No comments:
Post a Comment