Wednesday, March 10, 2021

அடுப்பில்லா சமையல்

 காலை உணவு #அடுப்பில்லாசமையல்

முட்டைகோஸ் கூட்டு...

குடைமிளகாய் பொரியல்....

கேரட் பச்சடி.....

சிறு நெல்லிக்காய் சட்னி...

#ஆரோக்கியசமையல் 

கம்ப கூழ்...

மிளகாய், சுண்டக்காய் வற்றல்....

அடுப்பில்லா சமையல்  செய்முறை.....

முட்டைகோஸ் கூட்டு : (ஒரு நபருக்கு)

===============================

மெலிதாக நறுக்கிய முட்டைகோஸ் 3ஸ்பூன்...

உறவைத்த கடலைபருப்பு ஓரு ஸ்பூன்

துருவிய தேங்காய்....5 ஸ்பூன்.....

இரண்டுஸ்பூன் நறுக்கிய வெங்காயம்.....

ஒரு சிட்டிக்கை சீரகம், 5 மிளகு, மிக சிறு துண்டு இஞ்சி சேர்த்து மைய இடித்துக்கொள்ளவும்....

கொத்தமல்லி,கருவேப்பிலை,உப்பு தேவையான அளவு...

அனைத்தையும் சேர்ந்து கையால் கலந்து கொள்ளவும் கூட்டு ரெடி......

குடைமிளகாய் பொரியல் (ஒரு நபருக்கு)

===================================

3ஸ்பூன் பொடியாக நறுக்கிய குடைமிளகாய்...

2ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்

5ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும் பொரியல் ரெடி....

கேரட் பச்சடி....

=============

துருவிய கேரட், வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு,  தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்

பச்சடி ரெடி

நெல்லிக்காய் சட்னி

=================

விதை நீக்கிய சிறு நெல்லி, வரமிளகாய் ஓன்று ,பூண்டு இரண்டுபல், உப்பு சேர்த்து இடித்து கொள்ளவும்

நெல்லி சட்னி ரெடி....

மிக்க நன்றி...அடுத்த பதிவில் சந்திக்கலாம்...



No comments:

Post a Comment