சில்லி கோபி
தேவையான பொருட்கள்
காலி ப்ளவர் - ஒன்று
சிகப்பு மிளகாய் - ஐந்து
கார்ன் ப்ளவர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை(விருப்பபட்டால்)
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்
காலி ப்ளவர் பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.
கார்ன் ப்ளவர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை(விருப்பபட்டால்)
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்
காலி ப்ளவர் பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
* முதலில் சிகப்பு மிளகாயை சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
* கார்ன் ப்ளவரில் உப்பு,,நல்லெண்ணெய்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,சிகப்பு மிளகாய் விழுது சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தை விட சிறிதளவு நீர்க்க கலந்து கொள்ளவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் காலிப்ளவரை பெரிய பெரிய பூக்களாக நறுக்கி போட்டு அது முங்கும் அளவு நீர் சேர்த்து மூன்று ஸ்பூன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.
* எண்ணையை சூடாக்கவும்.
* எடுத்ததும் உடனே வடிகட்டி காலிப்ளவரை கார்ன் ப்ளவர் கலவையில் சேர்த்து மூன்று நிமிடம் வைத்து சூடாக்கிய எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.இப்போது சுவையான சில்லி கோபி தயார்.
🧜♀️சுபயாழ்னி🧜♀️

No comments:
Post a Comment