Wednesday, March 10, 2021

முகப்பருவை நீக்கும் பயத்தம் மாவு, பரு வடு மறைய

 முகப்பருவை நீக்கும் பயத்தம் மாவு...

வெண்ணெயுடன், சர்க்கரை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு பிறகு பயத்த மாவு கொண்டு தேய்த்து கழுவினால், முகம் கண்ணாடி போல் பளபளக்கும்.

பயத்தம் மாவு மற்றும் கசகசாவை அரைத்துப் பூசினால், கண்களுக்குக்கீழே உள்ள கருவளையம் மறையும்.

பயத்தம் மாவை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். வாரம் ஒரு முறையோஅல்லது 2 முறையோ இதைச் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முக அழகு கூடும்.

கொத்தமல்லி மற்றும் புதினா இலையை அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்

===========================================================================

பரு வடு மறைய.....

பழுத்த ஸ்ட்ராபெர்ரி முகப்பருவால் வரும் வடுக்களை விரைவில் குறைக்க உதவுகிறது. இது தோலில் உள்ள அனைத்து அசுத்தங்கள் மற்றும் கெட்டதை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம், ஒரு இயற்கை வடிவம் கொண்டிருக்கிறது. இதனால் முகப்பரு வடுக்கள் எளிதில் குறைந்து அழகான தோற்றத்தை தருகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது.

வீட்டில் ஸ்ட்ராபெர்ரி பேஸ்ட் செய்யும் முறை :

3 ஸ்ட்ராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்

இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் தோலில் இருக்கும் காயங்கள், முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல நிறத்தை தரும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வர வேண்டும். ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதை பார்க்கலாம்.

தக்காளி ஃபேஸ் பேக் :

3 தக்காளி எடுத்து தோல் நீக்கி அதனுடன் தயிர் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் உலர விட்டு குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனை தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் பருவால் உருவான வடுக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

No comments:

Post a Comment