பருக்களை போக்கும் எளிய அழகு குறிப்புகள்
சரும பராமரிப்பு 1:
தேவையான பொருட்கள்: ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன்
பயன்படுத்தும் முறை: ஒரு பெளலில் 1/2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் 1 டேபிள் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து விடுங்கள். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே நீங்கள் பருக்கள் அற்ற முகத்தை பெறலாம்.
சரும பராமரிப்பு 2:
தேவையான பொருட்கள்:
முட்டையின் வெள்ளை கரு மற்றும் லெமன்
பயன்படுத்தும் முறை: ஒரு பெளலில் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். ஓரிரு நாட்களில் பருக்களின் வீரியம் குறைந்து மறைந்து விடும்.
சரும பராமரிப்பு 3:
தேவையான பொருட்கள்: க்ரீன் டீ பேக் மற்றும் தேன்
க்ரீன் டீ - தேன்: க்ரீன் டீ பேக் நமது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை கொடுக்கிறது. பயன்படுத்தும் முறை க்ரீன் டீ பேக்கை வெட்டி அதிலுள்ள பொடியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பெளலில் எடுத்து 1-2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
முகத்தை நன்றாகக் கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை அப்ளே செய்து 5-10 நிமிடங்கள் இருங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
பரு வடு மறைய.....
பழுத்த ஸ்ட்ராபெர்ரி முகப்பருவால் வரும் வடுக்களை விரைவில் குறைக்க உதவுகிறது. இது தோலில் உள்ள அனைத்து அசுத்தங்கள் மற்றும் கெட்டதை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம், ஒரு இயற்கை வடிவம் கொண்டிருக்கிறது. இதனால் முகப்பரு வடுக்கள் எளிதில் குறைந்து அழகான தோற்றத்தை தருகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது.
வீட்டில் ஸ்ட்ராபெர்ரி பேஸ்ட் செய்யும் முறை :
3 ஸ்ட்ராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்
இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் தோலில் இருக்கும் காயங்கள், முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல நிறத்தை தரும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போட்டு வர வேண்டும். ஒரு மாதத்தில் நல்ல முன்னேற்றம் தெரிவதை பார்க்கலாம்.
தக்காளி ஃபேஸ் பேக் :
3 தக்காளி எடுத்து தோல் நீக்கி அதனுடன் தயிர் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் உலர விட்டு குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனை தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் பருவால் உருவான வடுக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.
No comments:
Post a Comment