(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −19
(ஆசிரியர் :− திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)
266. வெண்பட்டு, நார்மடி போன்றவற்றை தண்ணீரில் அலசக்கூடாது.
அவற்றின் மேல் சிறிது நீரைத் தெளித்து, சூரிய வெளிச்சத்தில் உலர்த்தி எடுக்க வேண்டும்.
267. விதவிதமான வர்ணங்களில் கோடுகள் போடப்பட்டுள்ள வேஷ்டியை பூஜை, அபிஷேகம், ஜபம், ஹோமம் ஆகியவை செய்யும்போது பயன்படுத்தக் கூடாது.
268. நீரின் சூட்டை அறிந்துகொள்ள, கையை நீரினுள் விடக்கூடாது. சிறிது நீரை எடுத்து உள்ளங்கையில் விட்டு நீரின் சூட்டை அறியலாம்.இல்லையேல் நீருள்ள பாத்திரத்தைத் தொட்டுப்பார்த்து அறியலாம்.
269. உந்தி (Navel point) தெரிவதுபோல பஞ்சகச்சம் அணியக்கூடாது.
270. கல்யாணங்களிலும், விசேஷங்களிலும் கருப்பு நிற புடவை, வேஷ்டி ஆகியவற்றை அடுத்தவர்க்கு வைத்துக் கொடுக்கக் கூடாது.
271. பந்தியில் நிறைய பேர் அமர்ந்திருக்கும்போது, ஒருவரை மட்டும் விசேஷமாகக் கவனிக்கக் கூடாது. அனைவரையும் சமமாகவே பாவிக்க வேண்டும்.
272. ஈர ஆடையுடன் உணவருந்தக் கூடாது.
273. ஆவணி அவிட்டத்தன்று காலையில் சிற்றுண்டி (tiffin) சாப்பிடக் கூடாது.
274. சுவையான உணவுகளை முதலில் அடுத்தவர்க்குக் கொடுத்துவிட்டே, தான் சாப்பிட வேண்டும்..
275. கிரகணத்திற்கு முன் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிடக் கூடாது.
276. சாதத்தை உருட்டி உருட்டி வாயில் போட்டுக் கொள்ளக் கூடாது.
277. முடிதிருத்தம் செய்துகொள்வதற்கு முன் உணவருந்தக் கூடாது.
278. காரடையான் நோன்பு செய்வதற்கு முன் மோர் சாப்பிடக் கூடாது.
279. வாழை இலையில் சாப்பிடும்போது, நுனி சிறுத்த பகுதி சாப்பிடுபவரின் இடது பக்கம் இருக்க வேண்டும்.
280. கிரகணத்தின் போது நாமும் சாப்பிடக் கூடாது. அடுத்தவர்க்கும் உணவளிக்கக் கூடாது.
(வளரும்..)
No comments:
Post a Comment