(தெரிந்து கொள்ளலாமா?..)
தர்ம சாஸ்திரம் பகுதி −13
(ஆசிரியர் −திரு. V.ராஜகோபால கனபாடிகள்..)
171. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், அவர்களின் வசிப்பிடங்களில் ஏதேனும் மரணம் நேர்ந்திருந்தால், அந்த பூதஉடல் வெளியேறும்வரை, தமது இல்லங்களில் இறை பூஜையைச் செய்யக் கூடாது.
172. இறப்புத் தீட்டில் இருப்பவர்கள், விபூதியை நீரில் குழைத்து தரிக்கக் கூடாது.
நீரில் குழைக்காத விபூதியைத் தரிப்பதில் தவறில்லை.
173. இறப்புத் தீட்டு முடிகின்ற தினத்தில் காலை 8.20க்கு பிறகே ஸ்நானம் செய்யவேண்டும்.
174. தகுந்த காரணங்கள் இல்லாமல் பிறப்பு இறப்புத் தீட்டுகளை நீட்டிக்கக் கூடாது.
175. யாத்திரை செல்பவர்கள் குடை, பல்லக்கு, டோலி இத்யாதிகளை உபயோகிக்கக் கூடாது.
176. ஏற்கனவே உபயோகித்திருந்த தர்ப்பையை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
177. வெற்றிலையைப் பின்புறமாக மடிக்கக் கூடாது.
178.வீட்டில் குளவிகூடு இருந்தால், அதைக் கலைக்கக் கூடாது.
179. பருத்தி, ஆமணக்கு போன்றவற்றை வீட்டின் முன்புறம் வளர்க்கக் கூடாது.
180. பூஜை மணி, புத்தகம், புஷ்பம், வெற்றிலை, விபூதி, ருத்ராக்ஷம் ஆகியவற்றைத் தரையில் வைக்கக் கூடாது.
181. பரமசிவனின் வாகனம் என்பதால், எருதின் மேல் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது.
182. ஸ்நானம் செய்தவர்கள், ஸ்நானம் செய்யாதவரைத் தீண்டக் கூடாது. அவ்வாறு தீண்டினால் அசுத்தி(விழுப்பு) ஏற்படும்.
183. பெண் குழந்தைகளுக்கு நட்சத்திரங்களின் பெயர்களையோ (அசுவனி, பரணி, க்ருத்திக்கா, ரேவதி), மரங்களின் பெயர்களையோ (வேம்பு, அரசு), நதிகளின் பெயர்களையோ (கங்கா, யமுனா, பாகீரதி, சரஸ்வதி) வைக்கக் கூடாது. அப்படிச் செய்வது, திருமணத் தடைகளை உண்டாக்கும்.
184. இறைவன்முன்பு ஏற்றிவைக்கின்ற விளக்குகளை வெற்றுத்தரையில் வைக்கக் கூடாது.
185. விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்கின்ற பாலையும், சந்தன நீரையும், தனித்தனியாக சேகரிக்க வேண்டும்.
(வளரும்..)
No comments:
Post a Comment