ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் -பகுதி 10
(By Venkatesan Varadharajan 6381369319)
ஶ்ரீகூர்மம் ….இராமானுஜர் ….
ஶ்ரீகாகுளத்தில் தான், உலகத்திலேயே, கூர்மவதாரத்திற்கான கோவில் அமைந்துள்ளது. இங்கு விக்கிரகம் எதுவும் கிடையாது. ஒரு ஆமையின் உடலே விக்கிரமாக தொல்பொருளாக இருகிய நிலையில் [fossil] உள்ளது. கோவிலில் ஆமைகள் இருக்கின்றன. கோவில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. இங்கு ஆமைகள் அதிகம் காணப் படுகின்றன. கோவிலுக்கு அருகில் ஸ்வேத புஷ்கரனி உள்ளது. ஆமையைப் போல அடங்கி [பஞ்ச பூதங்களுக்கு] -அடக்கி [மனம்-உடல்] வாழ்ந்தால் 80-150 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்றுள்ளது. பரிணாம வளர்ச்சியில் ஆமை முக்கியமான பங்கு வகிக்கிறது. நீரிலிருந்து நிலத்திற்கு உயிரினங்கள் பரவுவதைக் காட்டுகிறது.
இத்தலம் முன்பு ஜைனர்கள்-பௌத்தர்கள் கட்டுப் பாட்டில் இருந்தது. பிறகு சைவர்கள் வழிபட்டபோது, கூர்ம லிங்கேஸ்வரம், பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டு சைவாகம பூஜை விதிமுறைப்படி பூஜைகள் நடைபெற்றது. ஜைனர்-பௌத்தர்களின் தாந்திரீக தாக்கம் நீங்கவில்லை.
ஆனால், ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க வேண்டி, அந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் கொடிமரம் அமைந்திருந்த இடத்தின் அருகில் சென்று நெடுஞ்சாண் கிடையாக வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டது. கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது்
இதைக் கண்டு வியந்த மக்கள் அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கினர். பொதுவாக மாற்று மதத்தினரால் பாதிக்கப் பட்ட, தாக்கப் பட்ட, சேதப் படுத்தப் பட்ட கோவில்களை மாற்றியமைக்கும் போது, புனர்-நிர்மாணம் செய்து விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யும் போது, மேற்கு பக்கமாக பார்கும் படி வைப்பர். கொடிகம்பமும் அவ்வாறே வைக்கப் படும். இந்த கூர்ம கோவிலானது, முக்கியத்துவத்தால், ஜைன-பௌத்தர்-தாந்திரீகர்-த்லுக்கர்-போர்சுகீசியர் என்று பலர் தாக்கியது குறிப்பிடப் பட்டது.
இக்கோவிலில் இரண்டு த்வஜ ஸ்தம்பங்கள் / கொடிகம்பங்கள் – முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என்று உள்ளன. ஒருவேளை இரண்டு கோவில்கள் [விஷ்ணு-சிவன் என்று இருப்பது போல] இருந்திருக்கலாம். கிருஷ்ண கர்ணாம்ருதத்தை இயற்றியவரான பில்வமங்கள தாகூர் கோயிலினுள் நுழைய முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது, அவர் மேற்கு புற மதில்சுவரின் அருகே பணிவுடனும் பக்தியுடனும் பிரார்த்தனை செய்ய, கிழக்கு நோக்கி இருந்த கூர்ம தேவர், பில்வமங்கள தாகூர் நின்றிருந்த மேற்கு திசை நோக்கி தரிசனம் அளித்தார் என்று இன்னொரு விளக்கமும் கொடுக்கப் படுகிறது.
கோயிலின் இடதுபுறத்தில் பில்வமங்கள தாகூருக்கு ஒரு சிறிய சந்நிதியும் அமைந்துள்ளது. ஶ்ரீகிருஷ்ணாம்ருதம் பாடியவரும் இவரும் ஒன்று என்கிறார்கள். அதன்படி, இவர் கேரளத்துக் காரர் என்கிறார்கள். கௌடியா மட சம்பிரதாயத்தின் படி, இவர் சைத்தியன்யரின் சீடர். அவரது சமாதி பிருந்தாவனத்தில் உள்ளது. ஆனால், அவரது சமாதி இக்கோவிலில் உள்ளது என்றும் வைகுண்டவாசியான பில்வமங்கள தாகூர் இங்கே நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார் என்றும் இன்னொரு வழக்குப் படி சொல்லப் படுகிறது. இக்காரணத்தினால் இரண்டு கொடிமரங்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன.
மந்திரமலையை கடையும் போது கடலுக்குள் சென்றுவிடாமல் கூர்மாவதாரம் எடுத்து தாங்கினார் பெருமான். அதனை சிற்ப வடிவமாக உள்ளே நுழையும் போது மேலே ஆரச்சில் வடிவமைத்துள்ளாரகள்.
சிறிது தூரம் சென்றால் கோயில் காணப்படுகின்றது.. சின்ன கோயில் தான். கோயிலின் தல வரலாறு வைத்துள்ளார்கள். கோயிலின் வலப்புறத்திலேயே நிறைய ஆமைகள், அவை வெளியே வந்துவிடாமல் இருக்க, அவைகளை கூண்டில் அடைத்து வைத்துள்ளார்கள். கோயிலின் பிராகாரத்தில் நான்கு புறமும், 108 தூண்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன.
கரப்பகிரஹத்தின் உள்ளேயே சென்று பெருமாளை சேவிக்கலாம். சந்நனக்காப்பு இட்டுள்ளார்கள். திவ்ய தரிசனம் கிடைத்து பாக்யம் பெற்றோம்.
பிராகாரத்தில் தசாவதாரத்துக்கும் சிற்ப வடிவில் வைத்துள்ளார்கள்..
அடுத்து பூரி புண்ணிய ஷேத்திரம்
No comments:
Post a Comment