Sunday, July 19, 2020

பெரியவா ஈடுபாடு

பெரியவா திருவடியே   சரணம்.

மாமி, உங்களுக்கு ஆரம்ப காலத்துலேர்ந்தே பல விதத்துலயும் உதவியா இருந்தவா பத்தி சொல்றேன்னு சொன்னேள். அதுக்கு முன்னாடி, உங்களுக்கு எப்படி பெரியவாட்ட இவ்வளவு ஈடுபாடு வந்ததுன்னு சொல்லுங்கோ.

அதுவா, என்னோட நாத்தனார் குடும்பத்துல எல்லாருக்கும் பெரியவட்ட அப்படி ஒரு பக்தி. பீக்ஷாவந்தனம் செய்வா. பெரியவாளோடையே இருப்பா. எனக்கும் பெரியவாளுக்கு பீக்ஷாவந்தனம் செய்யணும்னு ஆசையா இருந்தது. அத என் நாத்தனார் கிட்ட சொன்னேன். அவாதான், மத்தூர் ஸ்வாமிகளோட பூர்வாச்ரம தாயார். அவா சொன்னா, எதுக்கு இவ்வளவு ஆதங்க பட்டுக்கற, உனக்கு தான் பெரியவாட்ட இத்தனை பக்தி இருக்கே, நிச்சயம் நடக்கும்னு. நான் முதல்ல சொன்னேனே, பெரியவா எனக்கு குடும்ப பொறுப்பை கொடுத்து தன்னை எங்கிட்டே இருந்து சில வருஷங்களுக்கு மறச்சுண்டுட்டான்னு, அந்த சமயம்.

இப்படி இருக்கறச்சே ஒரு நாள் எனக்கு சொப்பனம் வந்தது. யாரோ ஒரு சந்நியாசி, தெலுங்கு கட்டு வெள்ளை புடவைல இருந்த ஒரு இளம் வயசு மாதுவோட ஆத்துக்குள்ள நுழைஞ்சா. சந்யாசியை அடையாளம் தெரிஞ்சுது. மஹா பெரியவா! கூட வந்தவாளோட முகம் பரிச்சயமா இருந்தது. உத்து பாத்தேன். தாயார் ஆர்யாம்பாள்! நான் பெரியவாட்ட உங்களுக்கு பீக்ஷா வந்தனம் செய்யணும்னு சொல்றேன். பெரியவா சொல்றா 'ஏன் இவ்வளவு தாபப் படறே, எனக்கு மோர் சாதம் மட்டும் போரும்'னு. சட்டுன்னு எனக்கு முழிப்பு வந்துடுத்து.

இந்த கனவுக்கு என்ன அர்த்தம்னு யோசிச்சு பாத்தேன். ஸ்ரீ ஆதி சங்கரர் தான் ஸ்ரீ மஹா பெரியவாளா அவதாரம் பண்ணி இருக்கார்னு புரிஞ்சுது. பெரியவா தான் சாக்ஷாத் பரமேஸ்வரனேன்னு எனக்கு உணர்த்தினா. அப்போ ஆரம்பிச்ச பீக்ஷா வந்தனம் மஹா பெரியவா சித்தி ஆறவரைக்கும் தொடர்ந்தது. அதுக்கப்றம், ஸ்ரீ மத்தூர் ஸ்வாமிகள் கிட்ட கேட்டேன், இனிமே என்ன பண்றதுன்னு. அவர்தான், பெரியவா ஜெயந்தி பன்னுங்கோன்னு சொன்னார்.

இவ்ளோ சொல்றச்சே, என் நாத்தனாரோட ஆத்துக்காரர், எங்காத்து மாப்பிள்ளையை பெரியவா எப்படி காப்பாத்தினா அப்டிங்கறதையும் சொல்லணும். அவர், பம்பாய்ல இருந்து எப்போ காஞ்சிபுரத்தை தாண்டி வர வேண்டி இருந்தா நிச்சயம் பெரியவாள பாக்காம போகமாட்டா. ஒரு தடவை திருச்சி ஜீய புரத்துல ஒரு கல்யாணத்துக்காக வரும் போது காஞ்சிபுரம் போனா. பெரியவா தரிசனம் முடிஞ்சப்புறம் கெளம்பறதுக்கு உத்தரவு கேட்டா. பெரியவா ஒண்ணுமே பேசாம எழுந்து உள்ள போய்ட்டா. இவரும், ராத்திரி அங்கேயே தங்கிட்டு, மறு நாள் காலைல குளிச்சு பெரியவா தரிசனத்துக்கு போனா. அப்போ பெரியவா யாரையோ ஒருத்தரை அன்னிக்கு பேப்பரை எடுத்துண்டு வரச் சொன்னா. அத இவர்ட்ட காட்டி, இந்த ரயில்ல தானே நீ போகறதுக்கு இருந்தேன்னு கேட்டா. அதுதான், அந்த அரியலூர் ரயில் விபத்து. எங்காத்து மாப்பிள்ளை, பெரியவா'ன்னு அவர் கால்ல விழுந்துட்டா.

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, நாம எப்பவுமே சித்த சுத்தி பண்ணிண்டே இருக்கணும். எல்லாருக்கும் எப்பவும் நல்லதுதான் செய்யனும். நம்மால யாருக்கும் ஒரு கஷ்டமும் வரக்கூடாது. அப்படித்தான் நம்ம கர்ம பலனை கொறச்சுக்க முடியும். பகவானும் ஓடோடி வந்து நம்மை ரட்ஷிப்பார்.

No comments:

Post a Comment