பேய் வீடு
ராமநாதன் ஒரு வங்கியில் பணி செய்யும் சிப்பந்தி. அவனுக்கு பக்கத்தில் உள்ள ஒரு டவுனுக்கு இட மாற்றம் ஏற்பட்டது. அந்த டவுனில் வாடகைக்கு வீடு கிடைப்பது மிகவும் சிரமம் . ஏனென்றால் அந்த டவுனில் உள்ள எல்லோரும் சொந்த வீடு வைத்திருப்பவர்கள். ஆகவே அங்குள்ளவர்கள் யாரும் சொந்த வீடு வாங்குவதற்கு முதலில் முயற்சி செய்வார்களேத் தவிர வாடகை வீடு பற்றி நினைக்கவே மாட்டார்கள். ஆனால் ராமநாதன் நிலைமையோ வேறு. அவனால் சொந்த வீடு வாங்க முடியாது. ஆகவே அவன் அந்த டவுனில் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருந்தான். வீடு விஷயமாக பலரிடம் சொல்லி வைத்திருந்தான். யாரோ ஒருவர் ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக அவனிடம் கூறினார். மேலும் அந்த வீட்டின் முகவரியையும் அவனிடம் கொடுத்திருந்தார். ஆகவே ராமநாதன் அங்கு சென்று அந்த வீட்டு வாசலில் இருக்கும் கடைக்காரரிடம் அந்த வீட்டு விஷயமாக கேட்டான். அப்போது அந்த வீட்டுக்காரரும் அங்கு வந்திருந்தார். கூடவே அவர் நண்பரும் இருந்தார். இராமநாதன் வீட்டுக்காரரிடம் "உங்க வீடு காலியா இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதனால எனக்கு வாடகைக்கு தர முடியுமா?"என்றார். அவர் அதற்கு"இந்த ஊர்ல வாடகை வீடுன்னு எதுவும் கிடையாது. நீங்க வாடகைக்கு கேக்குறீங்க. நான் வாடகைக்கு கொடுக்க ரெடியா இருக்கேன். ஆனா நீங்க குடி வர ரெடியா இருக்கீங்களா?" அப்படின்னு கூறினார்.
"எனக்கு புரியல .என்ன சொல்றீங்க? எனக்கு இந்த ஊருக்கு இடமாற்றம் ஆயிருக்கு. அதனால் கேட்கிறேன். நீங்கள் உங்க வீட்டை வாடகைக்கு கொடுக்க ரெடியா இருந்தா நான் குடி வர ரெடி. இதுல என்ன இருக்கு?" என்றான். "அப்படின்னா இந்த வீட்டை பத்தி எதுவுமே உங்களுக்குத் தெரியாதா.? உங்களுக்கு இந்த வீடு இருக்குன்னு சொன்னவரு வீட்டைப்பத்தி சொல்லலையா?"என்றார்.
உடனே ராமநாதன்"ஏன் தண்ணி வசதி இல்லையா?" என்றாரன்.
" இல்லை. எல்லாமே அதிகமாகவே இருக்கு. ஆனா..." என்று மிடறு விழுங்கினார் வீட்டுக்காரர். "அப்ப என்ன? வேற என்ன? மறைக்காம சொல்லுங்க. பரவாயில்ல. வாடகை எவ்வளவு ?"என்றான்.
'" அதை பத்தி கவலைப்படாதீங்க. அது உங்களால் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு தான் வாங்குவேன். அதுக்கு மேல கேட்க மாட்டேன். ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லிடறேன். இந்த வீட்ல ஒரு அமானுஷ்ய சக்தி இருக்குன்னு சொல்லிட்டு யாரும் குடி வரமாட்டேங்கறாங்க." என்றார் வீட்டுக்காரர். ராமநாதன் 'ஹோ' என்று சிரித்து விட்டு "அப்படியா? என்னை விட பெரிய அமானுஷ்ய சக்தி இருக்க முடியுமா?"என்று பெரிய நகைச்சுவை கூறியதுபோல் சிரித்தான். அவன் கூறியதைக் கேட்ட வீட்டுக்காரர் " அப்படின்னா உங்களுக்கு பயம் இல்லையா ? அப்படின்னா உள்ள போய் பார்த்துட்டு வாங்க" என்று அவனை வீட்டின் சாவி கொடுத்து வீட்டுக்குள் போகச் சொன்னார் . அவர் அவர் பயந்து கொண்டு உள்ளே செல்லவில்லை.அவன் சாவியை வாங்கிக்கொண்டு பூட்டை திறந்து உள்ளே நுழைந்தான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவன் "இந்த வீட்டில நீங்க சொன்ன மாதிரி ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்கறது உண்மைதான். எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு. நான் கிளம்பறேன்." என்று பதில் கூறி விட்டு ஓடினான். வீட்டுக்காரர் "அதான் நான் தான் அப்பவே சொன்னேனே. கொடுங்க சாவியை" என்று சாவியை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டார். பிறகு ராமநாதன் தான் சிற்றுண்டி அருந்தச் செல்வதாக கூறினான். வீட்டுக்காரர் கூட வந்தவரும் பின்னால் சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து பின்னால் சென்றவர் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார். வந்தவர் "ஐயோ... நான் என்னத்தன்னு சொல்லுவேன். வீடு தேடி கொண்டு வந்த அந்த பையன் வேகமாக வந்த லாரி மோதி அந்த இடத்திலேயே பலியாயிட்டான்." என்று மூச்சிரைக்கக் கூறினார்.
சிறிது நேரத்தில் ராமநாதனே அங்கு வர அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வந்தவன் வீட்டுக்காரரிடம் "ஐயா இந்த வீடு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. நான் இனிமே இருக்க வேண்டிய இடம் இதுதான். ஆமாம்... சாவியை கொடுங்க"ன்னு சொல்லி அவரிடமிருந்து சாவியை பிடுங்கி கொண்டு சென்றான். இந்நிகழ்வைக் கண்ட அனைவரும் மயக்கமுற்றனர்.
No comments:
Post a Comment