11. திரு ஆதனூர்
மூலவர் :ஆண்டளுக்கும் ஐயன்
தாயார் : பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி.
உற்சவர் : அழகிய மணவாளன் (ஸ்ரீரெங்கநாதன்)
பாசுரம்
அன்னவனை ஆதனூராண்டாளக்குமையனை *
நென்னலையின்றினை நாளையை * - நீர்மலைமேல்
என்று திருமங்கையாழ்வாரால் பாசுரம் பெற்ற இத்திவ்ய தேசம்.
வழித்தடம்
இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ஊருக்கு நேராகவே பேருந்து வசதி உள்ளது. இத்தலத்து எம்பெருமானைச் சேவித்து விட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்று விடலாம்.
தலவரலாறு.
பிர்ம்மாண்ட புராணத்தின் 3வது பிரிவில் இத்தலம்பற்றி பேசப் படுகிறது.
ஆண்டு அளக்கிறார் நாம் தினமும் சாப்பிட வேண்டும் என்றும் சாப்பிடறதுக்கு படியளக்க வேண்டியும் பெருமாள்தான் படி அளக்கிறார். ஆண்டு நம்மை அரசனாக இருந்த ஆண்டு அளக்கும், நமக்கு அன்னத்தைப் படி அளந்து கொடுக்கும் அய்யன் நெஜமாவே இது பேரோட மட்டுமில்லை அவர் மரக்கால் படியோட தான் அங்கு எழுந்தருளியிருக்கிறார் தன்னுடைய தலைக்கு கீழே ஒரு படி வைத்துக் கொண்டிருக்கிறார். படி வைத்தது ஆச்சரியமில்லை கொடுத்தாலும் கணக்குப் போட்டுக் கொடுக்க வேண்டும் இல்லையா எத்தனை பக்தர்கள் வந்து கேட்டாலும் கணக்கில்லாத கொடுக்கலாமா அதனாலே இடது கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் சயனத்தில் இருக்கின்றார். படியளக்கும் பெருமாள். ஆண்டளக்கும் ஐயன் அதைத்தான் திருமங்கையாழ்வாரால் பாசுரத்தில் பாடியிருக்கிறார்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் இந்த ஊருக்கு ஏன் இந்த பெயர் வந்தது ஆதனூர் ஆ பசு தன் ஊர் பசு காமதேனு. காமதேனு பகவானை சேவித்து சிறந்த கதி அடைய வேண்டும் என்பதற்காக இந்த க்ஷேத்திரத்தில் இருந்துதான் தபஸ் பண்ணினாள் அவள் தவம் புரிந்து
பெருமாளை அடைந்த காரணத்தினால் ஆ தன் ஊர் ஆவின் உடைய ஊர் பசுவினுடைய ஊர் ஆதனூர் என்று பெயர் ஏற்பட்டது காமதேனு தபஸ் பண்ணி ஆச்சரியமாக பெருமாளை அடைந்தாள். ஒரு பக்கம் காவிரி மற்றும் கொள்ளிடம் இந்த இரண்டுக்கும் நடுவே அமைந்த திவ்ய தேசம் ஆண்டளக்கும் ஐயன் சயனத் திருக்கோலத்தில் உள்ளார் கிழக்கு நோக்கி பள்ளிகொண்ட திருக்கோலம்.
இங்குள்ள எம்பெருமானை ப்ருகு மஹரிஷியே பிரதிஷ்டை செய்ததாக ஸ்ரீபாஞ்ராத்ர ஆகமத்தில் உள்ள பௌஷகா ஸம்ஹிதையின் மூலம் அறியப்படுகிறது.
ஒரு சமயம் பிறகு வைகுண்டம் சென்று எம்பெருமானையும், பிராட்டியையும் வழிபட பிராட்டி பூமாலையொன்று பரிசளிக்க, அத்துடன் இந்திர லோகம் சென்ற ப்ருகு அதனை தேவந்திரனுக்குத் தர, அதனையவன் தனது ஐராவதம் என்ற யானைக்குச் சூட்ட அந்த யானை அதனைத் துதிக்கையில் சுற்றி கீழே போட்டுக் காலால் மிதித்து அப்பாலும் இப்பாலும் அசை போடுவதுபோன்று அசைய ஆரம்பித்தது.
இதனால் மிக்க சீற்றங்கொண்ட ப்ருகு இந்திரனைச் சபிக்க இந்திரன் எல்லாச் செல்வங்களும், சுக போகங்களும் இழந்து இறுதியில் திருமாலிடம் பிராயச்சித்தம் கேட்டு நிற்க, அவனை நோக்கிய பிராட்டி நான் ப்ருகுவுக்கு பார்க்கவி என்ற பெயரில் மகளாகப் பிறந்து வளர்ந்து வருங்காலை திருமால் என்னைத் திருமணஞ் செய்யும்போது நீ அந்த ஸ்தலத்தில் வந்து சேவிப்பாயாக, உனது சாபந்தீரும் என்று கூற அவ்விதமே எம்பெருமான் பார்க்கவியைத் திருமணஞ் செய்யும் போது இந்திரன் இத்தலத்தில் வந்துவேண்ட அவனது சாபம் தீர்ந்து இழந்தது பெற்றான். சிவன் பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ள அது கையில் ஒட்டிக் கொள்ள அதைச் சுட்டெரித்து சாம்பலாக்குமாறு சிவன் அக்னிதேவனிடம் செல்ல அக்னியால் அது முடியாமல் போனது மட்டு மன்றி அவனையும் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அப்பாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்தில் கடுந்தவமிருந்து எம்பெருமான் காட்சி தந்து சாபம் போக்கினார்.
எல்லா தேவர்களுக்கும் அக்னி பதிலியாக இருந்தபடியால் அக்நிர்வை
ஸர்வ தேவர் என்பர் இத்தன்மைத்தான அக்னியின் தோஷமும், இந்திரன்
சாபமும் நீங்கினமையால் இத்தலம் தேவாதி தேவர்களின் ஸ்தலமாக
கருதப்படுகிறது.
ஸ்வாமி உ வே வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://youtu.be/5VPMGiBPy40
No comments:
Post a Comment