Wednesday, March 10, 2021

பூண்டு சாதம்

 பூண்டு சாதம்  சாப்பிட்டு பாருங்க சர்க்கரை வியாதி என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது...

👍👍👍

பூண்டில் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

இப்போது பூண்டு சாதம் எப்படி செய்யலாம் பார்க்கலாமா...

தேவையான பொருள்கள் :

*உதிரியாக வடித்த சாதம் 2 கப்
*சின்ன வெங்காயம் அரை கப்
*பூண்டு ஒரு கப்
*இஞ்சி ஒரு துண்டு
*கறிவேப்பிலை சிறிதளவு
*வறுத்துப் பொடித்த மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
*சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
*மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
*கடுகு ,சீரகம் அரை டீஸ்பூன்
*நெய் 2 டேபிள் ஸ்பூன்
*பச்சை மிளகாய் 4
*உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை :

வெங்காயம் பூண்டு இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்குங்கள். நெய்யில் கடுகு சீரகம் மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து வெங்காயம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்.

கமகம பூண்டு சாதம் ரெடி.

#வாங்க_சாப்பிடலாம்...!

No comments:

Post a Comment