Tuesday, March 9, 2021

பீர்க்கங்காய் பஜ்ஜி, ஆனியன் சட்னி

 பீர்க்கங்காய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் - 1, 
கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், 
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், 
சோள மாவு - 2 டீஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். 

* பீர்க்கங்காயை தோல் சீவி வில்லைகளாக நறுக்கி, மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு எடுக்கவும்.இப்போது சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி தயார்.

🧜‍♀️சுபயாழ்னி🧜‍♀️


=========================================================================

ஆனியன் சட்னி


தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் 4 மெலிதாக அரிநதது
வரமிளகாய் 4
முந்திரி 5 அல்லது 6
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தாளிக்க

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் மெலிதாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்

பிறகு முந்திரி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்

ஆறிய பிறகு அரைத்து கடுகு தாளித்து கொட்டி பரிமாறவும்

வெங்காயம் அதிக பொன்னிறமாக வதக்கினால் இனிப்பு தன்மையாகும் அதனால் பாதியளவு வதக்கவும்

🧜‍♀️   சுபயாழ்னி🧜‍♀️



No comments:

Post a Comment