Monday, March 15, 2021

சதுரகிரி முதன்முறை செல்பவர்களுக்காக

 சதுரகிரி முதன்முறை செல்பவர்களுக்காக...

*************

பலரும் என்னிடம் அலைபேசியில், இன்பொக்ஸில், பதிவில் முதன் முறை சதுரகிரி செல்வது குறித்து கேட்டார்கள். அவர்களுக்காக இந்த பதிவு.

அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே மலையேற அனுமதி. ( சிவராத்திரி, ஆடி அமாவாசை சிறப்பு அனுமதி )

சதுரகிரி செல்ல மதுரை பேருந்து நிலையம் வந்துவிடுங்கள். அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி கிருஷ்ணன் கோயில் என்ற இடத்தில இறங்கிவிடுங்கள்.

அங்கிருந்து தாணிப்பாறை - மலை அடிவாரம் - வரை செல்ல ஆட்டோக்கள் உள்ளன .நாங்கள் சென்றபோது ஒரு நபருக்கு 50 ரூபாய் மட்டுமே கேட்டார்கள்.

காலை 6 மணி அளவில் வனத்துறையின் கேட் திறக்கப்படும். அப்போதே ஏறுவது வெயிலை தவிர்க்க உதவும்.

.அதிக சுமைகளை கொண்டு செல்லாதீர்கள். ஏறுவது கடினம். ஏறும் வழியில் பல இடங்களில் வனத்துறை  water tank  வைத்துள்ளார்கள். சுவையான, சுத்தமான  நல்ல குடிநீர். மூன்று வேலையும் மேலே அன்னதானம் சிறப்பாக உண்டு. எனவே இவைகளை சுமந்து செல்லாதீர்கள்.

.மேலே தங்குவதற்கு 6 பெரிய தங்குமிடங்கள் உள்ளது. கிட்டத்தட்ட 1500  நபர்கள் தங்கலாம். இரவு தங்கினால் போர்வை, சால்வை கொண்டு செல்லவும். நல்ல குளிர் இருக்கும்.  ( கேட்டால்,  இரவு தங்க அனுமதி இல்லை என்பார்கள் . ஆனால் தங்க அனுமதிப்பார்கள் )

.வயதானவர்களுக்கு ஏறமுடியாவிட்டால் தூக்கி செல்ல தூளி வசதி உள்ளது. மேலே கூட்டி சென்று கீழே இறக்கி விடுவதற்கு ஒரு நபருக்கு 6000 ரூபாய் கட்டணம்.

.கையில் தேவையான மாத்திரை, மருந்துகள் எடுத்து சென்று விடுங்கள். 

.ஏறும்போது நிதானமாக , அனுபவித்து, மெதுவாக ஏறுங்கள் .  அவசரம் வேண்டாம்.

.டிசம்பர் , ஜனவரி , பிப்ரவரி  மாதங்கள் செல்வது சிறப்பு. அதிக மழை, வெயில் இருக்காது. நல்ல  குளிர்ச்சி இருக்கும். மழை காலங்களில் ஏறுவது கடினம்.

.சந்தேகம் எனில்  சுந்தரமகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அலைபேசியுள்ளது. கேட்டு செல்லுங்கள். 

periasamy- 9626832131 

sampath- 9843637301 

vivekanandan 9884175701 .

( please call us between 6 am- 6 pm )

.

No comments:

Post a Comment