ஶ்ரீராம காவியம்
ராமர் கோவில்கள் -39
101)மூன்றாம்பட்டி கோதண்டராமசாமி கோயில்...
★இந்த கோதண்டராமசாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், மூன்றாம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீ ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ஸ்ரீராமன், லஷ்மணன், சீதாதேவி சன்னதிகளும், ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடக்கின்றது. பொங்கல் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
102)கோவில்பாளையம் இராமசாமி கோயில்...
★இந்த கோவில்பாளையம் இராமசாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கோவில்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தத்
திருக்கோயில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ராமசாமி, சீதாதேவி, கன்னிமார் சன்னதிகளும், விநாயகர், ஆஞ்சநேயர் ஆகியோரின் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்கள் குழுவால் இத்திருக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாதி சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக இங்கு நடைபெறுகிறது.
103)அருமுளை கோதண்டராமசுவாமி கோயில்...
★கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அருமுளை என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் கோதண்ட ராமர் சன்னதியும், அனுமன், சீதை உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற முறையில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
104)திருவையாற்றுக்குடி சந்தானராமசாமி கோயில்...
★திருவையாற்றுக்குடி சந்தானராமசாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றுக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★ இக்கோயிலில் சந்தான ராமர், சீதை சன்னதிகளும், கருடாழ்வார், கிருஷ்ணன், அனுமார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிரவாகியால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
105)கங்காதரபுரம் கோதண்டராமசாமி
கோயில்...
★இந்த கோதண்டராமசாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கங்காதரபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் கோதண்ட ராமர் சுவாமி, ஸ்ரீதேவி, பாமா சன்னதிகளும், கருடன், ஆஞ்சிநேயர் ஆகியோரின் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூஜை நடக்கின்றது. பங்குனி மாதம் ராமநவமி முக்கியமான ஒரு திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
நாளை................
No comments:
Post a Comment