Wednesday, March 10, 2021

ராமர் கோவில்கள் -37

 ஶ்ரீராம காவியம்

~~~~

ராமர் கோவில்கள் -37

97)திருஇந்தளூர் ராமசாமி கோயில்...

★திருஇந்தளூர் ராமசாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் இராமர், லெட்சுமணர், சீதை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

★இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

98)சப்பானிபட்டி கிராமம் கோதண்டராமர் சுவாமி கோயில்...

★சப்பானிபட்டி கிராமம் கோதண்டராமர் சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், சப்பானிபட்டி  என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீ ராமர் கோயிலாகும். இந்த ஶ்ரீராமர் கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

★இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் 3 ஆம் சனி முக்கியமான ஒரு திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.

99)பாஸ்கரராஜபுரம் கோதண்டராமசுவாமி கோயில்...

★பாஸ்கரராஜபுரம் கோதண்ட ராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், பாஸ்கரராஜபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் பெருமாள் (கோதண்டராமர்) சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

★இங்குள்ள சீதாராமர் மற்றும் லக்ஷ்மணர் விக்கிரகங்களை மைசூர் மன்னர் தந்ததாக இவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாசாமி சாஸ்திரிகள் என்பவர் இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அவர் மைசூர் மன்னரிடம் திவானாக  பணி புரிந்து வந்துள்ளார். எனவே, மன்னர் திவானுக்கு அந்த ஶ்ரீராமர் விக்கிரகங்களைத் தந்தாராம். அண்ணாசாமி சாஸ்திரிகள் வைத்து வழிபட்ட அந்த  விக்கிரகங்கள் தற்போது பந்தநல்லூர் இந்து சமய அறநிலைய  துறையின் பாதுகாப்பில் உள்ளன. அந்த விக்கிரகங்களை மீண்டும் தங்கள் கோயிலில் வைத்து வழிபட வேண்டும் என்று ஊர் மக்கள் முயற்சி செய்து, அதற்கான வேலைகளையும் தற்போது செய்து வருகின்றனர். 

★இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

★கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை வழியில் திருவாலங்காடு வரை பேருந்து வசதி உள்ளது. திருவாலங்காட்டிலிருந்து பாஸ்கரராஜபுரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.


நாளை...............

No comments:

Post a Comment