Thursday, March 11, 2021

ராமர் கோவில்கள் -30 சாயமலை மலைச்சாமி என்ற இராமர் கோயில்

ஶ்ரீராம காவியம்

~~~~

ராமர் கோவில்கள் -30

86)சாயமலை மலைச்சாமி என்ற இராமர் கோயில்...

★இந்த  இராமர் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், சாயமலை என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

87)ஆரணி கோதண்டராமர் வீரஆஞ்சநேயர் கோயில்

★ஆரணி கோதண்டராமர் வீரஆஞ்சநேயர் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.  இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில்  கோதண்ட ராமர், ஸ்ரீ சீதா சன்னதிகளும், லட்சுமணர், சக்கரத்தாழ்வார், மற்றும்  ராதாருக்மணி, வேணுகோபால, ஆஞ்சநேயர் ஆலயம் (தனி) மற்றும் சில உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு சிறிய கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற. ஒரு பிரிவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத நிர்வாக அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

★இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி முக்கிய திருவிழாவாக மிகசிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் விஷ்ணு தீபம் ஆகிய திருவிழாக்களும் இங்கு நடைபெறுகிறது.

88)சிரமேல்குடி விஜயபட்டாபி ராமசாமி கோயில்...

★விஜயபட்டாபி ராமசாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் சிரமேல்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இத்திருக்கோயிலில் விஜயபட்டாபி ராமர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை பரம்பரையாக அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

★இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

நாளை...............

No comments:

Post a Comment