ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -16
37)கேட்டவரம்பாளையம் ராமர் பஜனை மந்திரம் கோயில்.
★கேட்டவரம்பாளையம் ராமர்பஜனை மந்திரம் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், கேட்டவரம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. சித்திரை மாதம் தீமிதித் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
38) கரடிசித்தூர் கோதண்டராமர் கோயில்...
★கரடிசித்தூர் ஶ்ரீ கோதண்ட ராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், கரடிசித்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீ ராமரின் கோயிலாகும். இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு பிரிவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு
இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
39)குண்ணத்தூர் ராமர்பஜனை கோயில்...
★குண்ணத்தூர் ராமர்பஜனை கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், குண்ணத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற பிரிவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இங்கு
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.
40)நாகந்தூர் ஶ்ரீபட்டாபிராம சுவாமி கோயில்...
★ ஶ்ரீபட்டாபிராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், நாகந்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★ஶ்ரீராமர் தனது ராவண வதத்தை முடித்துக்கொண்டு சீதாவுடன் அயோத்தி நகரை நோக்கித் திரும்புகையில் பல பகுதிகளில் தன்னுடைய திருப்பாதங்களை பதித்தார். அப்படி அவர் கால் பதித்த தடங்களில் ஒன்றே நாகந்தூர். எங்கு காணிணும் பசுமைத் தோட்டங்கள், குளத்தில் பூத்துக் குலுங்கிய அல்லியும், தாமரையும் நிழல் தரும் உயர்ந்த மரம் ஆகியவற்றை கண்டவுடன் சற்று நேரம் இளைப்பாறியபோது இந்த ஊரே நான் உகந்த ஊர் என மனமகிழச் சீதாவிடம் தெரிவித்தார். இப்படி இராமர் வைத்த நான் உகந்த ஊரே பின்னாளில் நாகந்தூர் என மாறியது.
★இந்து இதிகாசங்களின்படி, திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இராமர். பொதுவாக ஶ்ரீராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று புராணங்களின் வாயிலாக அறிய முடிகிறது. வால்மீகி எனும் முனிவரால் இயற்ற பட்டதாகக் கருதப்படும் இராமாயண வரலாற்றின் முக்கிய மாந்தராகவும் இவர் உள்ளார். இந்துக்கள் பெரும்பாலும் வழிபடக்கூடிய, பல்வேறு பெருமைகளைக் கொண்டுள்ள இராமர் விருப்பப்பட்டு தமிழகத்தில் குடியேறிய திருத்தலம் இதுவென்று தெரியுமா ?. கிரக தோஷத்தில் சற்றும் விடுபட முடியாதவர்கள் நிச்சயம் சென்றுவரவேண்டிய அந்தக் கோவிலுக்கு நீங்கள் வாருங்கள், சென்று வருவோம்.
★விழுப்புரத்தில் இருந்து சுமார் 34 கிலோ மீட்டர் தொலைவில் திருவம்பட்டு கிராமத்திற்கருகே உள்ளது நாகந்தூர். திண்டிவனத்தில் இருந்து தீவனூர் வழியாக சுமார் 29 கிலோ மீட்டர் பயணித்தாலும் நாகந்தூரை அடையலாம்.
★நமது தமிழகத்தில் ஶ்ரீராமருக்கு என ஏராளமான கோவில்கள் காணப்பட்டாலும் நாகந்தூரில் அமைந்துள்ள இத்தலத்தையே அவர் விருப்பப்பட்டுத் தேர்வு செய்து குடியேறியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும், வேறெங்கும் இல்லாதவாறு ஶ்ரீராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப் பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாக உள்ளது.
★இக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட ஓரிரு வாரங்களிலேயே தோஷம் நீங்கி செழிப்படைவர். பித்திரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும் இக்கோவிலில் வழிபட முன்னேற்றம் காணலாம்.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
நாளை.....................
No comments:
Post a Comment